மாயமான விமானத்தின் இடம் பற்றிய தகவல்கள் இந்தோனீசிய கடற்படை வசம்

மாயமான விமானத்தின் இடம் பற்றிய தகவல்கள் இந்தோனீசிய கடற்படை வசம்

2 mins read
03e48218-8604-4b87-a6d1-ed581e582d37
விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகாத நிலையில், விமானத்தின் சிதறிய பாகங்களைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. -
multi-img1 of 3

ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை கிளம்பிய விமானம் ஒன்று கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்திருப்பதாக இந்தோனீசியாவின் தேடி மீட்கும் முகவை தெரிவித்துள்ளது.

அந்த விமானத்தின் இடம் பற்றிய தகவல்கள் இந்தோனீசிய கடற்படைக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து கப்பல்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவிஜயா ஏர் ஃபிளைட் SJ182 விமானம் கிளம்பிய சற்று நேரத்துக்குள் அதனுடனான தொடர்பு அற்றுப் போனது.

விமானத் தளத்துடனான அந்த விமானத்தின் கடைசித் தொடர்பு இன்று பிற்பகல் 2.40 (சிங்கப்பூ ர்நேரப்படி 3.40 ) மணிக்கு இருந்ததாகக் கூறப்பட்டது.

FlightRadar24 தகவலின்படி அது ஒரு போயிங் 737-500 ரக விமானம் என்று தெரியவந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் இரண்டு விபத்துகளில் தொடர்புடைய போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இது இல்லை.

ஜகார்த்தாவின் சொகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த விமானம் மேற்கு கலிமந்தானில் உள்ள பொன்டியானாக் விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.

ஒரு நிமிடத்துக்குள் சுமார் 3,000 மீட்டர் உயரத்தை அந்த விமானம் இழந்ததாக விமானங்களின் பயணத்தைக் கண்காணிக்கும் இணையத் தளமான Flightradar24.com குறிப்பிட்டது.

அந்த விமானத்தில் சிறுவர்கள் உட்பட 50 பயணிகளும் 12 சிப்பந்திகளும் இருந்தனர்.

வடக்கு ஜகார்த்தாவின் தவுசண்ட் ஐலேண்ட்ஸ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பெருத்த சத்தம் கேட்டதாக லன்சாங் தீவுவாசி ஒருவர் குறிப்பிட்டதாக உள்ளூர் வானொலி செய்தி குறிப்பிட்டது. மழைக்காலமாக இருப்பதால் அது இடியாக இருக்கலாம் என்று கருதியதாக அவர் சொன்னார்.

விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாகாத நிலையில், விமானத்தின் சிதறிய பாகங்களைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

விமானம் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரித்துக்கொண்டிருப்பதாக ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனம் தெரிவித்தது.

தேடி, மீட்கும் பணிகள் தொடர்வதாக இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்