31 நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 562 பேருக்கு தொற்று

சிங்­கப்­பூர் தனது எல்­லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதன் விளை­வாக, கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 15ஆம் தேதி முதல் இம்­மா­தம் 10ஆம் தேதி வரை­ 26 நாட்­களில் 30 வெவ்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­ 562 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இது எதிர்­பார்க்­கப்­பட்­ட­து­தான் என்று கூறும் அறி­வி­ய­லா­ளர்­கள், உலக அள­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்த வண்­ணம் இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரில் மேற்­கொள்­ளப்­படும் கடு­மை­யான பரி­சோ­தனை முறை­க­ளால் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, தேவைப்­பட்­டால் சிகிச்சை அளிக்­கப்­பட்டு குண­மாக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­ற­னர்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் நாள்­தோ­றும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­க­ளி­டம் ஓரி­லக்க எண்­ணிக்­கை­யி­லான அதா­வது பத்­துக்­குக் குறை­வான சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

புருணை, சீனா, நியூ­சி­லாந்து, வியட்­னாம், ஆஸ்­தி­ரே­லியா, தைவான் ஆகிய நாடு­க­ளின் பய­ணி­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து தளர்த்­தி­யது. அத்­து­டன், வர்த்­த­கங்­கள் எதிர்­நோக்­கும் மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றைப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணும் வகை­யில் புதிய வேலை அனு­ம­திச் சீட்டு, எஸ்-பாஸ் என அனைத்­துத் துறை­க­ளுக்­கான விண்­ணப்­பங்­க­ளுக்­கான கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டன.

“உலக அள­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில் அந்த நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளி­ட­மும் கிரு­மித்­தொற்று அறி­கு­றி­கள் இருப்­பது இயல்­பு­தான்,” என்­றார் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் லி கொங் சியான் மருத்­து­வப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் ஜோசிப் கார்.

“அதிக பாதிப்­புக்­குள்­ளா­கிய நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்து 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்படும்போது மேற்­கொள்­ளும்­போது, கிரு­மித்­தொற்று கண்டு­பி­டிக்­கப்­படும். நவம்­பர் 15ஆம் தேதி­யன்று 14,805 பேர் தனி­மைப்­படுத்­தப்­பட்­ட­னர். டிசம்­பர் 15ஆம் தேதி அந்த எண்­ணிக்கை 16,695க்கு உயர்ந்­தது,” என்­றார் சிங்­கப்­பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேரா சிரியர் டேல் ஃபிஷர்.

“வெளிநாட்டுப் பயணிகளிடம் கிருமித்தொற்று விரைவாகக் கண்டுபிடிக்கப்படுவதும் உள்ளூரில் சமூக அளவில் அது குறைவாக இருப்பதும் நமது கட்டுப்பாடுகள் நல்ல பலன் அளிப்பதைக் காட்டு கிறது,” என்றும் கூறினார் பேரா சிரியர் ஃபிஷர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!