விரைவில் கொவிட்-19 தடுப்பூசி மையங்கள்; பலதுறை, பொது மருந்தகங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு

ஒவ்­வொரு நாளும் அதிகமானவர்களுக்குத் தடுப்­பூசி போடும் வகை­யில் கொவிட்-19 தடுப்­பூசி மையங்­கள் அமைக்­கப்­படும் என்­றும் பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் பொது மருந்­த­கங்­க­ளி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யும் என்­றும் சிங்­கப்­பூ­ரின் தலை­மைச் சுகா­தார அறி­வி­யல் நிபு­ணர் டான் சோர் சுவான் தெரி­வித்­துள்­ளார்.

பல­துறை மருந்­த­கங்­க­ளி­லும் பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­க­ளி­லும் (பிஎச்­பிசி) பொது மருந்­த­கங்­க­ளி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யும்­ போது, அது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வச­தி­யா­க­வும் சௌக­ரி­ய­மா­ன­தா­க­வும் இருக்­கும் என்று பேரா­சி­ரி­யர் டான் கூறி­னார்.

அவ­ரு­டன் சேர்த்து சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கச் சுகா­தாரக் குழுமத்தைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 120 பேருக்கு நேற்று தடுப்­பூசி போடப்­பட்­டது.

தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் இடம்­பெற்ற அந்­தத் தடுப்­பூசி நட­வ­டிக்­கை­யில், கொவிட்-19 தடுப்­பூசி நிபு­ணர் குழு­வின் தலை­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் பெஞ்­ச­மின் ஓங் முத­லா­ம­வ­ரா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார்.

கொரோனா தடுப்­பூசி போடும்­போது கிட்­டத்­தட்ட வலியே தெரி­யாது என்று சொன்ன பேரா­சி­ரி­யர் ஓங், சில வாரங்­க­ளுக்கு முன்­புதான் சளிக்­காய்ச்­சல் தடுப்­பூ­சி­யும் போட்­டுக்­கொண்­டார்.

சளிக்­காய்ச்­சல், கொவிட்-19 தடுப்­பூ­சி­களை ஒன்­றாக எடுத்­துக் கொள்­ளா­மல் சில வார இடை­வெளி­யில் அவ்­விரு தடுப்­பூ­சி­களை­யும் போட்­டுக்­கொள்­ளும்­படி சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு பேரா­சி­ரி­யர் ஓங் ஆலோ­சனை கூறி­யுள்­ளார். அவ்­வாறு செய்­வது, அந்­தந்த தடுப்­பூ­சிக்கு ஏற்­ற­படி நமது நோயெ­திர்ப்பு மண்­ட­லத்­தைச் செயல்­பட அனு­ம­திக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

இது­வரை தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் எவ்­வாறு இருக்­கின்­ற­னர் எனக் கேட்­ட­தற்கு, “தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட முதல் தொகு­தி­யி­ன­ரில் சிலர் எங்­க­ளது நிபு­ணர் குழு­வில் இடம்­பெற்­றுள்­ள­வர்­கள். முத­லா­வ­தா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பெண்­ம­ணி­யி­டம் நான் பேசி­னேன். அவர்­கள் அனை­வ­ரும் நல­மாக உள்­ள­னர்,” என்று அவர் பதி­ல­ளித்­தார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சில வாரங்­கள் அல்­லது மாதங்­களுக்­குப் பின் பக்க விளை­வு­கள் ஏதே­னும் ஏற்­பட்­டால் அது குறித்து தடுப்­பூசி மையங்­க­ளி­லும் மருத்­து­வர்­க­ளி­ட­மும் சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­ட­மும் சிங்­கப்­பூ­ரர்­கள் தக­வல் தெரி­விக்­க­லாம் என்று பேரா­சி­ரி­யர் டான் தெரி­வித்­தார்.

அந்­தத் தர­வு­கள் மைய அள­வில் தொகுக்­கப்­படும் என்­றும் அதன்­மூ­லம் உள்­ளூர் மக்­க­ளி­டம் ஏற்­படும் பக்­க­வி­ளைவு குறித்து அதி­கா­ரி­கள் ஆராய இய­லும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்­பூ­சியை 21 நாள்கள் இடை­வெ­ளி­யில் இரு­முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும். அப்­ப­டி­யி­ருக்க, முதல்­முறை போட்­ட­பின் வலி, காய்ச்­சல் என ஏதே­னும் இலே­சான பக்­க­வி­ளைவு­கள் ஏற்­படும் பட்­சத்­தில் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தைத் தவிர்த்­து­விட வேண்­டாம் என்­றும் பேரா­சி­ரி­யர் டான் பொது­மக்­களை வலி­யு­றுத்தி இருக்­கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!