அமைச்சர் லாரன்ஸ் வோங்: கொவிட்-19 நோய்ப் பரவல் இன்னும் நான்கு, ஐந்து ஆண்டுகள் நீடிக்கலாம்

உல­கில் கொவிட்-19 நோய்ப் பர­வல் முடி­விற்கு வர இன்­னும் நான்கு அல்­லது ஐந்து ஆண்­டு­கள் ஆக­லாம் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

இடைப்­பட்ட காலத்­தில், கொரோனா பர­வ­லைக் கையாள்­வதில் உல­கம் இன்­னும் பல இடை­யூ­று­களை எதிர்­கொள்ள வாய்ப்­புள்­ளது என்று அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

“கொரோனா தடுப்­பூ­சி­கள் வந்து­விட்­ட­தால் படிப்­ப­டி­யாக அனைத்­து­ல­கப் பய­ணத்­தைத் தொடங்க முடி­யும் என்­றா­லும், உல­கம் முழு­வ­தும் தடுப்­பூசி போடு­வது அவ்­வ­ளவு விரை­வா­க­வும் எளி­தா­க­வும் நடந்­து­வி­டாது. அத­னால் இவ்­வாண்­டி­லும் ஒரு­வேளை அடுத்த ஆண்­டின் குறிப்­பிட்ட காலத்­தி­லும் பெரும் மாற்­றத்­திற்­கு உள்­ளான உல­கில் வாழ்வதற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் தயா­ராக இருக்க வேண்­டும்,” என்று, கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங் கூறி­இருக்கிறார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கம் நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘சிங்­கப்­பூர் கண்­ணோட்ட மாநாட்­டில்’ கலந்­து­கொண்­ட­போது அவர் இவ்­வாறு பேசி­னார்.

முகக்­க­வ­சம் அணி­வது, பாது­காப்­பான இடை­வெ­ளியை உறு­தி­செய்­வது, கூட்­டம் அதி­க­முள்ள இடங்­க­ளைத் தவிர்ப்­பது போன்­றவை அன்­றாட வாழ்க்­கை­யின் ஒரு பகு­தி­யா­கத் தொட­ரும் என்று அமைச்­சர் வோங் தெரி­வித்­தார்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தோன்­றிய உரு­மாற்­றக் கிரு­மியை எதிர்த்­துச் செயல்­படும் திறனை இப்­போ­தைய தடுப்­பூ­சி­கள் கொண்­டி­ரா­மல் போக­லாம் என்று முதற்­கட்ட ஆய்வு முடி­வு­கள் காட்­டு­வதை ஓர் இடை­யூ­றாக அவர் குறிப்­பிட்­டார்.

அதே நேரத்­தில், கொரோனா கிரு­மி­யின் எல்­லா­வி­த­மான திரிபு­க­ளுக்கு எதி­ரா­க­வும் செயல்­ப­டக்­கூ­டிய ஒரு தடுப்பு மருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அவர் சொன்­னார்.

மாறாக, சளிக்­காய்ச்­சல் தடுப்­பூசி போல, குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­யில் புதிய வகை தடுப்­பூ­சி­களும் உரு­வாக்­கப்­ப­ட­லாம் என்­றும் திரு வோங் கூறி­னார்.

“பகிர்ந்த உல­கில் நாம் வாழ்­கிறோம் என்­ப­தும் எல்­லா­ரும் பாது­காப்­பாக இருக்­கும் வரை எவ­ருக்­கும் பாது­காப்­பில்லை என்­ப­துமே இதி­லி­ருக்­கும் அடிப்­ப­டைச் செய்தி,” என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சில நேர்­ம­றை­யான மாற்­றங்­கள் தோன்­ற­லாம் என்­றா­லும், கொரோனா தொற்­றுக்­குப் பிந்­தைய உல­கம் இப்­ப­டித்­தான் இருக்­கும் என எவ­ரா­லும் கூற முடி­யாது என்­றார் அவர்.

1918 சளிக்­காய்ச்­சல் பர­வ­லுக்­குப் பின் வெற்­றி­லைப் படிக்­கம் பயன்­ப­டுத்­து­வ­தும் பொது இடங்­களில் எச்­சில் துப்­பு­வ­தும் சுகா­தா­ர­மற்ற பழக்­கங்­க­ளா­கப் பார்க்­கப்­பட்­டதை அமைச்­சர் வோங் சுட்­டி­னார்.

அது­போல, சிங்­கப்­பூ­ரி­லும் சுகா­தா­ரப் பழக்­கங்­கள் குறித்­தும் சமூகப் பொறுப்பு குறித்­தும் கொரோனா பர­வல் பெரும் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட திரு வோங், கைகுலுக்கு­வது போன்ற சில பழக்கவழக்­கங்­கள் ஒழிந்தே போக­லாம் என்­றும் சொன்­னார்.

ஒவ்­வொரு முறை நோய்ப் பர­வ­லின்­போ­தும் ‘தொற்று அபா­யத்­தைக் குறைக்க புது­வ­கை­யில் முக­மன் கூறு­வோம்’ என்ற குரல்­கள் எழும் என்ற அமைச்­சர், சிங்­கப்­பூ­ரில் 2003 சார்ஸ் பர­வ­லின்­போ­தும் அது நிகழ்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!