மலேசியாவுடனான 'பச்சைத் தட' இருவழி போக்குவரத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்தது சிங்கப்பூர்

மலேசியாவுடனான 'பச்சைத் தட' இருவழி போக்குவரத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்தது சிங்கப்பூர்

1 mins read
5e4c11b5-0d84-4999-baa0-50c8c61457c6
கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜெர்மனியுடனும் ஆகஸ்ட் மாதம் முதல் மலேசியவுடனும் செப்டம்பர் மாதம் முதல் தென்கொரியாவுடனும் சிங்கப்பூர் 'பச்சைத் தட' போக்குவரத்து ஏற்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியா, ஜெர்மனி, தென்கொரியா ஆகிய நாடுகளுடனான இருவழி 'பச்சைத் தட' போக்குவரத்து அனுமதியை பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூர் ரத்து செய்துள்ளது.

அனைத்துலக அளவில் கொவிட்-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சு இன்று (ஜனவரி 30) தெரிவித்தது.

மூன்று மாத காலத்துக்குப் பிறகு, 'பச்சைத் தட' போக்குவரத்து குறித்து மீண்டும் சிங்கப்பூர் ஆய்வு செய்யும். வர்த்தகங்களுக்கான அல்லது அலுவலக ரீதியான அத்தியாவசிய பயணங்களுக்கு 'பச்சைத்' தட' போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகின்றது.

சிங்கப்பூருக்குள் வர ஏற்கெனவே அனுமதி பெற்ற பயணிகள் தங்களது பயணத்தைத் தொடரலாம் என்றது அமைச்சு.

கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜெர்மனியுடனும் ஆகஸ்ட் மாதம் முதல் மலேசியவுடனும் செப்டம்பர் மாதம் முதல் தென்கொரியாவுடனும் சிங்கப்பூர் 'பச்சைத் தட' போக்குவரத்து ஏற்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்