சிங்கப்பூரில் மேலும் 58 பேருக்கு கொவிட்-19; உள்ளூரில் புதிதாக 3 சம்பவங்கள் பதிவு

சிங்கப்பூரில் மேலும் 58 பேருக்கு கொவிட்-19; உள்ளூரில் புதிதாக 3 சம்பவங்கள் பதிவு

1 mins read
71fbb4f8-ce86-429a-863a-fde34337355f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஜனவரி 30) நண்பகல் நிலவரப்படி புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களில் மூவருக்கு உள்ளூரில் கிருமித்தொற்று பதிவானது.

மற்ற 55 பேரும் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் 32 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.

இன்று விடுதிகளில் புதிய கிருமித்தொற்று பதிவாகவில்லை என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

சிங்கப்பூரில் இன்றுவரை மொத்தம் 59,507 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் உள்ளூர் சமூகத்திலோ அல்லது விடுதிகளிலோ புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 24 பேரும் வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில் ஒருவர் நீண்டகால வருகை அனுமதி உடையவர்; ஒருவர் மாணவர் அனுமதி அட்டை உடையவர்; 17 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்; ஒருவர் குறுகியகால வருகை அனுமதியும் ஒருவர் சிறப்பு வருகை அனுமதியும் பெற்றவர்கள்.

இவர்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 59,166 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள். 47 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகிறார்கள்.

சமூக நிலையங்களில் 192 பேர் குணமடைந்து வருகிறார்கள்.

கொவிட்-19 நோய்க்கு மொத்தம் 29 பேர் மரணமடைந்துவிட்டனர். அந்த நோய்த்தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர்.

குறிப்புச் சொற்கள்