சிங்கப்பூரில் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி; முதல் தொகுப்பு தடுப்பூசிகள் மார்ச் மாதத்தில் வந்து சேரும்

சிங்கப்பூரில் மொடர்னாவின் கொவிட்-19 தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுப்பு தடுப்பூசிகள் இங்கு மார்ச் மாதம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிடைத்த தரவுகளை ஆராய்ந்ததில் அந்தத் தடுப்பூசி 94% திறனுடன் செயல்படுவது தெரிய வந்துள்ளதாக சுகாதார அறிவியல் கழகம் (HSA) இன்று (பிப்ரவரி 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதல் ஏற்படும் நன்மைகள், அதனால் ஏற்படும் அபாயத்தைவிட அதிகம் என்றும் அது குறிப்பிட்டது.

இந்த தடுப்பூசி வழங்கப்பட்டவர்களிடையே, அறிகுறிகளுடன் கூடிய கொவிட்-19 பரவல் 94 விழுக்காட்டினருக்கு பரவாமல் இருந்தது. தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலானவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாக கழகம் தெரிவித்தது.

அமெரிக்காவில் 18 முதல் 95 வயதுக்குட்பட்ட 30,000க்கும் அதிகமானோரிடையே மூன்று நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட மருந்தகப் பரிசோதனைகளில் இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் கழகம் அனுமதி அளித்துள்ள இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசி மொடர்னா நிறுவனத்தினுடையது. ஏற்கெனவே ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்தத் தடுப்பூசி இப்போது இங்கு பயன்பாட்டில் இருக்கிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மொடர்னா தடுப்பூசி படிப்படியாக வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தனிப்பட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த இடைக்கால அனுமதி அளிப்பதற்கு முன்பு, இங்கு உள்ள பல்வேறு பிரிவினருக்கு இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் தரவுகளை சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசி நிபுணர் குழு மறுஆய்வு செய்ததாகக் கழகம் தெரிவித்தது.

இந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் திருப்தியளிப்பதாக இருப்பதாகவும் கழகம் குறிப்பிட்டது.

PSAR எனப்படும் கொள்ளைநோய் சிறப்பு அனுமதி வழியின்கீழ் மொடர்னா தடுப்பூசிக்கு இடைக்கால அனுமதி வழங்கப்படுவதற்கான நிபந்தனையாக, இந்தத் தடுப்பு மருந்து கொவிட்-19க்கு எதிராக எவ்வளவு கலத்துக்கு திறம்பட நோயெதிர்ப்பு வழங்குகிறது என்பதை அந்த நிறுவனம் கண்காணிக்க வேண்டும்.

அந்தத் தடுப்பூசியின் முழு பாதுகாப்பு விவரங்களைக் கண்டறிய, அந்தத் தடுப்பு மருந்தின் பாதுகாப்பை மொடர்னா நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை சிங்கப்பூரில் பயன்படுத்த இடைக்கால அனுமதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

மொடர்னா தடுப்பூசியின் 2 டோஸ்களை 28 நாள்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை 21 நாள்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.

இவ்விரு தடுப்பூசிகளுக்குமான பக்கவிளைவுகள் ஒரே மாதிரியானவையாக உள்ளன. தடுப்பூசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், அசதி, தலைவலி, தசை வலி, காய்ச்சல், குளிர், வாந்தி, மூட்டு வலி போன்றவை அவை.

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, 175,000 பேருக்கு மேல், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சுமார் 6,000 பேர் அந்தத் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தையும் பெற்றுக்கொண்டனர். இன்னும் இரு வார காலத்தில், அவர்கள் கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பைப் பெறுவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!