'சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு 4-6% ஏற்றம் காணும்'

சிங்கப்பூரின் பொரு­ளி­யல் இவ்­வாண்டு படிப்படியாக வளர்ச்சி காணும் என்று தொடர்ந்து முன்னுரைக்கப்பட்டு வரு­கிறது.

வேலை இல்­லா­த­வர்­க­ளுக்­கும் அதி­கம் பாதிப்­ப­டை­யக்­கூ­டும் பிரி­வி­ன­ருக்­கும் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கப்­படும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் இவ்­வாண்டு 4லிருந்து 6 விழுக்­காடு வளர்ச்சி அடை­யும் என்று வர்த்­தக, தொழில் அமைச்சு முன்­னு­ரைத்­துள்­ளது.

மற்ற நாடு­களில் நிக­ழும் நேர்­ம­றை­யான, எதிர்­ம­றை­யான நிகழ்­வு­க­ளைக் கருத்­தில் கொண்டு கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தில் இதே முன்­னு­ரைப்பை அமைச்சு முன்­வைத்­தது.

2011ஆம் ஆண்­டில் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி 6.3 விழுக்­காடு அதி­க­ரித்­தது.

அதை­ய­டுத்து இவ்­வாண்டு இறு­தி­யில் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி ஆக அதி­க­மாக உய­ரக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்­டில் இரண்­டாம் காலாண்­டில் பொரு­ளி­யல் 13.3 விழுக்­காடு சரிந்­தது.

இவ்­வாண்டு பதி­வா­கும் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு கடந்த ஆண்­டின் சரிவு ஒரு கார­ண­மா­க­வும் அமை­யக்­கூ­டும்.

கடந்த ஆண்டு கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் 5.4 விழுக்­காடு வீழ்ச்சி கண்­ட­தாக அமைச்சு கூறி­யது.

இதுவே சிங்­கப்­பூர் தனி­நா­டா­ன­ பின் சந்­தித்­துள்ள ஆக மோச­மான பொரு­ளி­யல் மந்­த­நிலை. 2019ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் 1.3 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

நான்­காம் காலாண்­டுக்­கான முன்­னு­ரைப்­பை­விட பொரு­ளி­யல் கூடு­த­லாக சரிந்­தது.

ஆண்­டுக்கு ஆண்டு அடிப்­ப­டை­யில் பொரு­ளி­யல் 2.4 விழுக்­காடு குறைந்­தது.

மூன்­றா­வது காலாண்­டில் பதி­வான 5.8 விழுக்­காடு வீழ்ச்­சி­யை­விட இது குறைவு.

காலாண்­டுக்­குக் காலாண்டு அடிப்­ப­டை­யில் நான்­கா­வது காலாண்­டில் பொரு­ளி­யல் 3.8 விழுக்­காடு வளர்ச்சி கண்­டது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் ஆய்வு நடத்­தப்­பட்­ட­தி­லி­ருந்து கொவிட்-19 தடுப்­பூசி மருந்து தயா­ரிப்­பி­லும் விநி­யோ­கத்­தி­லும் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்­றும் அங்­கீ­கா­ரம் பெற்ற பல தடுப்­பூசி மருந்­து­கள் உல­கெக்­கும் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் வர்த்­தக, தொழில் அமைச்சு தெரி­வித்­தது.

“தடுப்­பூசி மருந்து விநி­யோ­கம் செய்­யப்­படும் வேகம் நாட்டுக்கு நாடு வித்­தி­யா­சப்­ப­டு­கிறது. இருப்­பி­னும், அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­கள் போன்ற வலி­மை­யான பொரு­ளி­யலைக் கொண்ட நாடு­களில் மக்­கள் அனை­வ­ருக்­கும் இவ்­வாண்­டின் இரண்­டாம் பாதிக்­குள் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்டுவிடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

“இதன் கார­ண­மாக இந்­நா­டு­க­ள் பொரு­ளி­யல் மந்­த­நி­லை­யி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­கான சாத்­தி­யம் அதி­கம் உள்­ளது,” என்று அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அண்டை நாடு­க­ளான மலே­சி­யா­வி­லும் இந்­தோ­னீ­சி­யா­வி­லும் அண்­மைய கால­மாக கொவிட்-19 பாதிப்பு மீண்­டும் அதி­க­ரித்­துள்­ள­தால் அவ்­விரு நாடு­க­ளின் பொரு­ளி­யல் மீட்­சிக்­கான வாய்ப்­பு­கள் பல­வீ­னம் அடைந்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

“வெளி­நா­டு­கள், உள்­ளூ­ரில் நில­வும் சூழ­லைக் கருத்­தில் கொள்­ளும்­போது அடுத்த ஓராண்­டில் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் படிப்­ப­டி­யாக மீண்டு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

“ஆனால் வெவ்­வேறு துறை­களில் வளர்ச்சி வேறுப்­படும்,” என்று அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நா­டு­க­ளின் பொருளியல் மீண்டு வரு­வ­தால் வர்த்­த­கம் தொடர்­பான சேவை­கள் பலன் அடை­யும் என்று அமைச்சு கூறி­யது. முன்பு முன்­னு­ரைக்­கப்­பட்­ட­தை­விட உற்­பத்­தித் துறை இன்­னும் வேக­மாக விரி­வ­டை­யும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

தகவல், தொழில்நுட்பம், மின்­னி­லக்­கத் தீர்­வு­க­ள் முதலி யவற்றுக்கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் தக­வல், தொடர்பு துறை, நிதித் துறை, காப்­பு­று­தித் துறை ஆகி­யவை தொடர்ந்து சீரான வளர்ச்­சி­யைப் பதிவு செய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!