ஒன்றிணைந்து மேலும் வலிமையுடன் மீண்டெழுவதற்கான சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டம் 2021: முக்கிய அம்சங்கள்

* 3 துறைகளை இலக்காகக் கொண்ட $11 பில்லியன் புதிய கொவிட்-19 மீட்சித் திட்டம்

* பெரும்பாலான துறைகளில் வேலை ஆதரவு திட்டம் $700 மில்லியன் செலவில் நீட்டிப்பு

* விமான போக்குவரத்து, நிலப் போக்குவரத்து, கலைகள் போன்ற துறைகளுக்கு ஆதரவு

* நிறுவனங்கள், ஊழியர்கள் வலுவாக மீண்டு வர அடுத்த 3 ஆண்டுகளில் $24 பில்லியன் ஒதுக்கப்படும்

* தொழில்களுக்கு ஆதரவாக அரசாங்கம் நிறுவன கூட்டுத்தொழில் உந்துதளம்; பகிரங்க புத்தாக்க தளம்; உலக புத்தாக்க கூட்டணி ஆகிய மூன்று ஏற்பாடுகளில் முதலிடு செய்யும்

* நிறுவனங்கள் தங்கள் புத்தாக்க கண்டுபிடிப்புகளை வர்த்தகப்படுத்த ஏதுவாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவு சொத்து உத்தி 2030 என்ற ஓர் ஏற்பாட்டை உருவாக்கும்

* ஆசியான் சந்தைகள் ஒருங்கிணைப்பை மேம்படுத்த புதிய துறைகளில் பொதுவான ஏற்பாடுகளை சிங்கப்பூர் மேம்படுத்தும். மின்னிலக்க இணைப்பு, இணையப் பாதுகாப்பு மேம்பட ஆசியான் நாடுகளுடன் தொடர்ந்து அணுக்கமாக செயல்படும்

* எஸ்ஜி யுனைட்டெட் வேலை, தேர்ச்சி திட்டத்தின் அடுத்த கட்டம் 200,000 உள்ளூர் மக்கள் வேலைகளில் சேர இந்த ஆண்டில் ஆதரவளிக்கும். கூடுதலாக $5.4 பில்லியன் ஒதுக்கப்படும்

* தொழில்நுட்பத் துறைகளில் தலைவர்களை உருவாக்க புதிய புத்தாக்க தொழில்முனைப்பு ஆய்வாளர் செயல்திட்டம்

* தாதியர், இதர சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் சம்பளம் உயரும்

* சம்பளப் பற்று திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்; ஆற்றல் மாற்றுச் செயல்திட்டம் 2024 செப்டம்பர் வரை நடப்பில் இருக்கும்

* வெளிநாட்டு ஊழியர்களுக்கான எஸ் பாஸ் வரம்பு 2023ல் 15% குறைக்கப்படும்

* குடும்பங்களுக்கு உதவ புதிய $900 மில்லியன் குடும்ப ஆதரவு திட்டம்

* குறைந்த வருவாய் ஊழியர்கள், குறைந்த வருவாய் குடும்பங்கள், சிறப்பு உதவி தேவைப்படும் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு மேலும் நீண்ட கால ஆதரவு

* அறப்பணி அமைப்புகளுக்கு நிறுவனங்கள் ஆதரவளிக்க ஏதுவான திட்டங்கள் நீட்டிப்பு; புதிய $20 மில்லியன் மானியம்

இருப்பில் இருந்து எடுக்கப்பட்ட $52 பில்லியனில் $42.7 பில்லியன் தொகை 2020 நிதயாண்டில் செலவாகும் என்று அரசு எதிர்பார்க்கிறது. $9.3 பில்லியன் மிச்சம் இருக்கும்.

2020 நிதியாண்டில் ஒட்டுமொத்த பட்ஜெட் பற்றாக்குறை $64.9 பில்லியன் என்று அரசு எதிர்பார்க்கிறது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவே ஆக அதிகம். 2021 நிதியாண்டில் ஒட்டுமொத்த பட்ஜெட் பற்றாக்குறை $11 பில்லியனாக இருக்கும்

எம்ஆர்டி வழித்தடங்கள், கடல் அலை சுவர்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதகளுக்கு $90 பில்லியன் புதிய முறிகள் வெளியீடு

2021ல் ஜிஎஸ்டி அதிகரிப்பு இராது, ஆனால் 2022 முதல் 2025 வரை அதிகரிப்பு இடம்பெறக்கூடும். ஜிஎஸ்டி உயர்வால் ஏற்படக்கூடிய சுமைகளைக் குறைக்க $6 பில்லியன் உத்தரவாதத் திட்டம். 2022 ஜனவரி முதல் குறை மதிப்புள்ள பொருட்களுக்கு ஜிஎஸ்டி நீட்டிப்பு.

கொவிட்-19 மீட்சித் திட்டத்துக்கு $11 பில்லியன். இதில் சென்ற ஆண்டில் மிச்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் $9.3 பில்லியன், இருப்பில் இருந்து எடுக்கப்படும் 1.7 பில்லியன் ஆகியவை அடங்கும். இருப்பிலிருந்து மொத்தம் எடுக்கப்படும் தொகை $53.7 பில்லியனாக இருக்கும்.

சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் 2021 தொடர்பான விரிவான செய்திகளுக்கு, தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்! https://www.tamilmurasu.com.sg/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!