2020ல் உள்ளூர்வாசிகள் 25,000 பேருக்கு வேலை

2020ல் உள்ளூர்வாசிகள் 25,000 பேருக்கு வேலை

2 mins read
1d831795-6f20-4341-a32a-5ec8e30535fb
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அர­சாங்­கம், தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் இரண்­டும் இணைந்து அமைக்­கப்­பட்ட வாழ்க்­கைத்­ தொழில் நிலை­யங்­கள் கடந்த ஆண்­டில் 25,000 சிங்­கப்­பூ­ரர்­கள் மற்­றும் நிரந்­த­ர­வா­சி­களுக்கு வேலை தேடிக் கொடுத்­துள்­ளது என்­றும் அது முந்­திய ஆண்­டை­விட 25% அதி­கம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வேலை தேடும் பத்து பேரில் அறு­வர் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள் (பிஎம்­இடி) என்று சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு நேற்று வெளி­யிட்ட வேலை நில­வர அறிக்­கை­யில் கூறி­யது.

கடந்த ஆண்டு மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ­வால் தொடங்­கப்­பட்ட வேலை நில­வர அறிக்கை ஆட்­சேர்ப்பு அதி­கம் உள்ள துறை­களை அடை­யா­ளம் காட்­டி­யது.

நேற்று வெளி­யி­டப்­பட்ட 19வது அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்­பும் என்­டி­யு­சி­யில் வேலை வாய்ப்பு, வேலைப் பயிற்­சிக் கழ­க­மும் (இ2ஐ) மேற்­கொண்ட வேலை­யு­டன் ஊழி­ய­ரைப் பொருத்­தச் செய்­யும் முயற்­சி­க­ளைக் கடந்த ஆண்டு துரி­தப்­ப­டுத்­தி­யதை எடுத்­துக்­காட்­டி­யது.

தனிப்­பட்ட முறை­யில் வாழ்க்­கைத்­தொ­ழில் பயிற்­று­விப்பு 34,000 வேலை தேடு­வோ­ருக்­குப் பல­ன­ளித்­தது. அவர்­களில் மூன்­றில் இரு­வர் பிஎம்­இடி பிரி­வைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் இது 2019ஐ காட்­டி­லும் 15% அதி­க­ரிப்பு என்­றும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு விவ­ரித்­தது.

வாழ்க்­கைத்­தொ­ழில் பயிற்­சி­பெற்­ற­வர்­களில் பத்­தில் எட்டுப் பேர் வேலை­யில்­லா­மல் இருந்­த­வர்­கள். பத்­தில் அறு­வர் 40 வயது அல்­லது அதற்கு மேற்­பட்­ட­வர்­கள். பத்­தில் நால்­வர் கடந்த ஆறு மாதங்­க­ளாக வேலை தேடிக் கொண்­டி­ருந்­த­வர்­கள்.

13,000க்கு மேற்­பட்ட தனி­ந­பர்­கள் கடந்த ஆண்டு பணி­யி­டைக்­கால வேலை மாற்­றுத் திட்­டங்­கள் போன்ற வாழ்க்­கைத்­தொ­ழில் உரு­மாற்­றுத் திட்­டங்­களில் பதிந்­து­கொண்­ட­னர். இந்த எண்­ணிக்கை முந்­திய ஆண்­டைக் காட்­டி­லும் இரு மடங்கு அதிகம்.

கடந்த ஆண்டு 1,300க்கு மேற்­பட்ட வாழ்க்­கைத்­தொ­ழில் சந்­தை­களும் அது தொடர்­பான நிகழ்ச்­சி­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன. இது முந்­திய ஆண்­டைக் காட்­டி­லும் 40% அதி­கம்.

மெய்­நி­கர் மற்­றும் நேரடி வாழ்க்­கைத்­தொ­ழில் சந்தை, வேலை தொடர்­பான நேர்­கா­ணல்­கள், வாழ்க்­கைத்­தொ­ழில் பொருத்தச் சேவை­கள் ஆகி­யவை அவற்­றுள் அடங்­கும்.

வேலை தோடு­வோ­ரின் மிகப் பெரிய சவால்­க­ளாக, அவர்­க­ளுக்­குள் இருக்­கும் உணர்ச்­சித் தடை­கள், திறன் இடை­வெளி, புதிய வேலை நிலை­க­ளுக்­குத் தாக்­குப்­பி­டிக்க முடி­யாத போக்கு, வேலை தேடும் பழைய உத்­தி­கள் போன்­றவை அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன என்­றும் சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி அமைப்பு விளக்­கி­யது.

இவர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் அந்த அமைப்­பும் 'இ2ஐ' கழ­க­மும் பயி­ல­ரங்­கு­கள், கருத்­த­ரங்­கு­கள், தனிப்­பட்ட நிகழ்ச்­சி­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருக்­கின்­றன.

குறிப்புச் சொற்கள்