படிப்படியாக உயரும் சம்பளமுறையை சில்லறை வர்த்தகத்திற்கும் அறிமுகம் செய்ய ஆய்வு

படிப்படியாக உயரும் சம்பளமுறையை சில்லறை வர்த்தகத்திற்கும் அறிமுகம் செய்ய ஆய்வு

2 mins read
41e63e9f-8bfd-4138-b28c-eedd030c8e8e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

படிப்படியாக உய­ரும் சம்­ப­ள­ மு­றையை சில்­லறை வர்த்­த­கத் துறை­யில் எவ்­வாறு நடைமுறைப்படுத்துவது என அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­கிறது.

இந்தச் சம்­ப­ள­முறை நடப்­புக்கு வந்­தால் அந்­தத் துறை­யில் உள்ள குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் தங்­க­ளது செயல்­தி­றன்­க­ளுக்­கும் உற்­பத்­தித்­தி­றன்­க­ளுக்­கும் ஏற்ற வகை­யில் கட்­டம் கட்­ட­மாக வரு­மான உயர்­வைப் பெறு­வர்.

முதன்­மு­த­லாக கடந்த 2012ஆம் ஆண்டு அறி­மு­கம் கண்ட படிப்­

ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­முறை, வெவ்­வேறு வேலைப் பொறுப்­பு­களில் உள்ள உள்­ளூர் ஊழி­யர்­

க­ளின் திறன்­கள் அதி­க­ரிக்­கும்­போது அதற்­கேற்ப சம்­ப­ளத்­தை­யும் உயர்த்­தும் கட்­ட­மைப்பு ஒன்றை ஏற்­ப­டுத்­து­கிறது.

ஒவ்­வொரு துறை­யிலும் உள்ள ஊழி­யர்­க­ளின் வாழ்க்­கைத்­தொ­ழில் முன்­னேற்­றத்­துக்­கும் அது வழி­கோ­லு­கிறது.

தற்­போது துப்­பு­ரவு, நில­வ­னப்பு, பாது­கா­வல் போன்ற துறை­களில் இந்தச் சம்­ப­ள­முறை கட்­டா­ய­மா­க் கப்­பட்டுள்­ளது. இவற்­றில் மட்­டும் சுமார் 80,000 ஊழி­யர்கள் வேலை செய்­கின்­ற­னர்.

அடுத்த ஆண்டு முதல் மின்­தூக்கி, மின்­ப­டிக்­கட்டு பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ருக்­கும் இம்­மு­றை­யைக் கடைப்­பி­டிப்­பது கட்­டா­ய­மா­கிறது.

இதனை சில்­லறை வர்த்­த­கங்­க­ளுக்­கும் நீட்­டித்­தால் பேரங்­கா­டி கள், அக்­கம்­பக்­கக் கடை­கள், ஆடை­ய­லங்­கா­ரக் கடை­கள் போன்­ற­வற்­றின் விற்­ப­னை சேவை ஊழியர்­களும் காசா­ளர்­க­ளும்­பல­ன­டை­வர் என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளுக்­கான முத்­த­ரப்பு பணிக்­ கு­ழு­வுக்­குத் தலைமை ஏற்­றுள்ள அவ­ரி­டம் குழு நடத்தி வரும் ஆய்­வுக்­குக் காலக்­கெடு ஏதும் உள்­ளதா என்று வின­வப்­பட்­டது. அது­கு­றித்த மேல்­வி­வ­ரங்­களை விரை­வில் குழு வெளி­யி­டும் என்­றார் அவர்.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இக்­குழு, இந்த சம்­ப­ள­மு­றையை அறி­மு­கம் செய்­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்து பல்­வேறு துறை­களை ஆய்­வில் எடுத்­துக்­கொண்டு உள்­ளது.

தொழில்­துறைத் தலை­வர்­கள் முதல் சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னப் பிர­தி­நி­தி­கள், தொழிற்­சங்­கத் தலை­வர்­கள், மூத்த அர­சாங்க ஊழி­யர்­கள் போன்­றோர் வரை பலரும் இந்­தக் குழு­வில் இடம்­பெற்று உள்­ள­னர்.

இந்த சம்­ப­ள­முறை குறித்த நல்­ல­தொரு புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வண்­ணம் ஜூவல் சாங்கி விமான நிலை­யத்­தில் உள்ள 'அடி­டாஸ்' கடைக்கு நேற்­றுச் சென்ற திரு ஸாக்கி, அங்கு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­முறை மூலம் சில்­லறை வர்த்­த­கத் துறை­யில் எத்­தனை ஊழி­யர்­கள் பல­ன­டை­வார்­கள் என்ற விவ­ரத்தை அவர் வெளி­யி­ட­வில்லை.

"குறை­வான ஊதி­யம் பெறும் உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யில் கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் சில்­லறை வர்த்­தக ஊழி­யர்­கள் உள்­ள­னர் என்­ப­தால் அவர்­கள் மீது கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது. அதன்தொடர்­ பில் பல்­வேறு நுணுக்­கங்­கள் ஆரா­யப்­பட வேண்டி உள்­ளன. சில நிறு­வ­னங்­கள் திறன் மிகுந்­த­வர்­களை நல்ல சம்­ப­ளத்­தில் வேலைக்கு அமர்த்­தும் அதே­நே­ரம் சிறிய கடை­கள் தங்­க­ளது ஊழி­யர்­க­ளுக்­குக் குறை­வான ஊதி­யத்தை வழங்­கு­கின்­றன," என்­றார் அமைச்­சர்.

ஒவ்­வொரு துறை­யும் ஏதோ ஒரு வகை­யில் படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை­யைப் பெற்­றி­ருக்க வேண்­டும் என்­பதே அர­சாங்­கத்­தின் விருப்­பம் என்று இம்­மா­தம் 16ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் வர­வு­செ­ல­வுத் திட்ட அறிக்­கை­யைத் தாக்­கல் செய்து பேசி­ய­போது துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் குறிப்­பிட்­டார்.

குறிப்புச் சொற்கள்