சிங்கப்பூரில் சமூக அளவில் ஒருவர் உட்பட 10 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் சமூக அளவில் ஒருவர் உட்பட 10 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
1529d18b-8b74-4f1e-8145-363388eb598b
சமூக அளவில் இந்தோனீசிய இல்லப் பணிப்பெண் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 12) சமூக அளவில் ஒருவர் உட்பட புதிதாக 10 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

எஞ்சிய ஒன்பது பேர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் எவருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, சமூக அளவில் இந்தோனீசிய இல்லப் பணிப்பெண் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்ட அறிமுக நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வேறொரு பணிப்பெண்ணுக்கு முன்னதாக தொற்று உறுதியாகி இருந்தது. அதே நிகழ்வில் இந்தப் பணிப்பெண்ணு பங்கேற்றார்.

இந்த 37 வயது பணிப்பெண்ணுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தொற்று உறுதியானது.

குறிப்புச் சொற்கள்
கொரோனாகிருமித்தொற்றுசிங்கப்பூர்