அமைச்சு எச்சரிக்கை: கொவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

அமைச்சு எச்சரிக்கை: கொவிட்-19 விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

1 mins read
601904a5-daa8-4ba6-bf55-8f9bb325ff35
கொரோனா கிருமி தொடர்பான குற்றங்களைச் செய்ததாக ஐவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடும் சுவாசப் பிரச்சினைகள் உடையோர் கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. கொரோனா கிருமி தொடர்பான குற்றங்களைச் செய்ததாக ஐவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வீட்டிலேயே தங்கி இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கியிருந்தபோதும் பொது இடங்களைப் பார்வையிட்டதன் மூலம் "மற்றவர்களை கொவிட்-19 தொற்று அபாயத்துக்கு உட்படுத்தியதாக," அந்த ஐவரில் இருவர் மீது இன்று (மார்ச் 15) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி கடும் சுவாசத் தொற்று பிரச்சினைக்காக பலதுறை மருந்தகத்தில் மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற 20 வயதான நிக் ஃபூ சுவான் ரோங் எனும் சிங்கப்பூரர், அந்த நாளின் பின்னேரத்தில் அயன் ஆர்ச்சர்ட், ஆர்ச்சர்ட் சென்ட்ரல், பூகிஸ் மற்றும் அட்மிரல்டி எம்ஆர்டி நிலையங்கள் ஆகிய இடங்களுக்குச் சென்றார். அதற்கு அடுத்த நாள் உட்லண்ட்ஸ் மற்றும் சாமர்செட் பகுதிகளுக்கும் ஃபூ சென்றிருந்தார்.

ஃபூ உள்ளிட்டோர் மீது தொற்று நோய்கள் (கொவிட்-19 இருப்பு ஆணைகள்) விதிமுறைகள் மற்றும் தொற்றுநோய்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்