தடுப்பூசிச் சான்றிதழ்களுக்கு இருதரப்பு அங்கீகாரம்: இணைந்து செயல்பட சிங்கப்பூர்-மலேசியா இணக்கம்

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்ய ஏதுவாக கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களுக்கு இருதரப்பும் அங்கீகாரம் அளிப்பது தொடர்பில் சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து செயல்பட உடன்பட்டுள்ளன.

வரும் மாதங்களில் கருணை அடிப்படையிலான எல்லை தாண்டிய பயணங்களை அனுமதிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன.

இருநாள் பயணமாக மலேசியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், புத்ராஜெயாவில் இன்று (மார்ச் 23) அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசேனைச் சந்தித்துப் பேசினார்.

இப்போதுள்ள இரு சிறப்புப் பயண ஏற்பாடுகளுடன் மற்ற வகைப் பயணிகளும் பயணம் செய்ய ஏதுவாக எல்லை தாண்டிய பயணத்தைப் படிப்படியாக அனுமதிக்கவும் இருநாட்டு அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்தனர்.

இரு நாடுகளிலும் கொவிட்-19 நிலைமை கண்காணிக்கப்பட்டு, இரு நாட்டு மக்களின் பொதுச் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.

தத்தம் நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் இருவரும் ஆக்ககரமான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூடிய விரைவில் எல்லை தாண்டிய பயணத்திற்கு அவை எவ்வாறு வகை செய்யும் என ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள், மலேசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் உட்பட இரு நாடுகளிலும் உள்ள நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் வகையில் தேசிய அளவிலான தங்களது தடுப்பூசித் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டு இருப்பதாக ஒரு கூட்டறிக்கை மூலம் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!