வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 130,000 உள்ளூர்வாசிகளுக்கு 27,000 நிறுவனங்களில் வேலை

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் மூலம் 130,000 உள்ளூர்வாசிகளுக்கு 27,000 நிறுவனங்களில் வேலை

1 mins read
b57f65b2-a66f-4ee3-b0a6-9c3b40da055d
'பசிபிக் லாஜிஸ்டிக்ஸ்' எனும் உள்ளூர் நிறுவனத்திற்கு இன்று (மார்ச் 31) வருகை மேற்கொண்டபோது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களை வெளியிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆதரவுடன் கடந்த ஆண்டின் செப்டம்பர் முதல் நவம்பர் வரை, 27,000 நிறுவனங்கள் சராசரியாக உள்ளூர்வாசிகள் இருவரை வேலையில் அமர்த்தின.

2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அந்நிறுவனங்களால் வேலைக்கு எடுக்கப்பட்ட உள்ளூர்வாசிகளின் இடைநிலை அளவு ஒன்றாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில், வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகமான முதல் மூன்று மாதங்களில், அதாவது 2020 செப்டம்பர்-நவம்பர் காலகட்டத்தில் ஏறக்குறைய 130,000 உள்ளூர்வாசிகள் பணியமர்த்தப்பட்டனர்.

'பசிபிக் லாஜிஸ்டிக்ஸ்' எனும் உள்ளூர் நிறுவனத்திற்கு இன்று (மார்ச் 31) வருகை மேற்கொண்டபோது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இந்த விவரங்களை வெளியிட்டார்.

அவற்றில் 99%, சிறிய, நடுத்தர நிறுவனங்கள். அவற்றில் பத்தில் ஆறு நிறுவனங்கள் ஒன்று முதல் இரண்டு உள்ளூர்வாசிகளையும் எஞ்சிய நான்கு நிறுவனங்கள் அதற்கு மேற்பட்டவர்களையும் வேலையில் அமர்த்தின.

உள்ளூர்வாசிகளைப் பணியில் அமர்த்துவதை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் $1 பில்லியன் மதிப்பிலான வேலை உருவாக்கத்திற்கான ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியுள்ள நிறுவனங்கள் வேலையில் அமர்த்தும் ஒவ்வோர் உள்ளூர்வாசிக்கும் 12 மாதங்கள் வரை, 25% ஊதிய ஆதரவைப் பெறும்.

குறிப்புச் சொற்கள்