சிங்கப்பூரில் 18 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் 9 பள்ளிகளாக இணைக்கப்படும்

சிங்கப்பூரில் 18 தொடக்க, உயர்நிலைப் பள்ளிகள் 9 பள்ளிகளாக இணைக்கப்படும்

1 mins read
05baae83-e1b2-4a4b-9a07-48c189f3c04a
இணைக்கப்படவிருக்கும் முதலிரு பள்ளிகள் ஜூயிங் தொடக்கப்பள்ளியும் (இடது) பைனியர் தொடக்கப்பள்ளியும் ஆகும். படம்: கூகல் வரைபடம் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 18 தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் இணைக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சு இன்று (ஏப்ரல் 7) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதன் காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகளை இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இணைக்கப்படவிருக்கும் முதலிரு பள்ளிகள் ஜூயிங் தொடக்கப்பள்ளியும் பைனியர் தொடக்கப்பள்ளியும் ஆகும். அடுத்த ஆண்டு அவை இணைக்கப்படவிருக்கின்றன. தற்போது ஜூயிங் தொடக்கப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இணைக்கப்பட்ட பள்ளி செயல்படும்.

மற்ற 16 பள்ளிகளும் இணைக்கப்படவுள்ளன. அவற்றில் 14 பள்ளிகள் 2023லும் இரு பள்ளிகள் 2024லும் இணைக்கப்படும். அவற்றில் யூனோஸ் தொடக்கப்பள்ளியும் தெலுக் குராவ் தொடக்கப்பள்ளியும் அடங்கும். தற்போது தெலுக் குராவ் தொடக்கப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இணைக்கப்பட்ட பள்ளி செயல்படும்.

இணைக்கப்படவுள்ள தொடக்கப் பள்ளிகள்:

ஜூயிங் தொடக்கப்பள்ளியுடன் பைனியர் தொடக்கப்பள்ளி

யூனோஸ் தொடக்கப்பள்ளியுடன் தெலுக் குராவ் தொடக்கப்பள்ளி

ஃபேரர் பார்க் தொடக்கப்பள்ளியுடன் ஸ்டாம்ஃபர்ட் தொடக்கப்பள்ளி

குவாங்யாங் தொடக்கப்பள்ளியுடன் டவுன்ஸ்வில் தொடக்கப்பள்ளி

இணைக்கப்படவுள்ள உயர்நிலைப் பள்ளிகள்:

பிடோக் கிரீன் உயர்நிலைப் பள்ளியுடன் பிங் யி உயர்நிலைப் பள்ளி

சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியுடன் டெக் வாய் உயர்நிலைப் பள்ளி

ஃபாஜார் உயர்நிலைப் பள்ளியுடன் கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளி

நியூ டவுன் உயர்நிலைப் பள்ளியுடன் தங்ளின் உயர்நிலைப் பள்ளி

ஃபூச்சுன் உயர்நிலைப் பள்ளியுடன் உட்லண்ட்ஸ் ரிங் உயர்நிலைப் பள்ளி

குறிப்புச் சொற்கள்