பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் முறை பற்றி அரசாங்கம் கலந்தாலோசனை

பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் முறை பற்றி அரசாங்கம் கலந்தாலோசனை

1 mins read
c8b639f7-d524-47a8-9487-d408314e0e26
சிங்கப்பூரில் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த கட்டணம் விதிக்கும் ஓர் ஏற்பாட்டின் பேரில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இப்போது செயல்பட்டு வருகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த கட்டணம் விதிக்கும் ஓர் ஏற்பாட்டின் பேரில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் இப்போது செயல்பட்டு வருகின்றன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் இன்று (ஏப்ரல் 10) இதனை அறிவித்தார். ஒருமுறை பயன்படுத்திவிட்டு கழிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயனீட்டைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் வாரியமும் எற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கிவைத்து டாக்டர் கோர் உரையாற்றினார். பிளாஸ்டிக் பைகள் பயனீட்டைக் குறைத்துக்கொள்ள குடிமக்கள், பணிக்குழுக்கள் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சும் வாரியமும் அந்த நிகழ்ச்சியில் பதிலளித்தன.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் ஏற்பாட்டை உருவாக்குவதன் தொடர்பில் அமைச்சும் வாரியமும் பொது கலந்துரையாடல்களைத் தொடங்கும் என்றார் அமைச்சர்.

பிளாஸ்டிக் பைகளுக்கு கட்டணம் விதித்தால் குறைந்த வருமான குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் டாக்டர் கோர் கூறினார்.

ஒரு பைக்கு கட்டணம் விதிப்பதா அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பதா என்பது பற்றி அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் அவர் விளக்கினார்.

ஒரு பைக்கு ஐந்து காசு அல்லது 10 காசு என்ற கட்டணம் சாத்தியமாகலாம் என்பதை அவர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்