சிங்கப்பூரில் புதிதாக 20 பேருக்கு கொவிட்-19 இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவற்றுடன் சிங்கப்பூரின் மொத்த எண்ணிக்கை 60, 653க்கு உயர்ந்தது.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் ஒருவர் ஊழியர் தங்கும் விடுதியைச் சேர்ந்தவர். எஞ்சிய 19 பேர் வெளிநாட்டில் கிருமி தொற்றியவர்கள். மேல் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவிக்கப்படும்.
இதற்கு முன்னதாக வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஏற்பட்ட கடைசி கிருமித்தொற்று ஆறு வாரங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 28ஆம் தேதியன்று நடந்தது.

