சமூகத்தில் ஐவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் ஐவர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
c39ab10b-de3c-4bc8-ad25-0fc1d04885ec
சமூக அளவில் அந்த ஐவர் போக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 18 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 24) நண்பகல் நிலவரப்படி, புதிதாக ஐந்து பேருக்கு சமூக அளவில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

பாதிக்கப்பட்ட அந்த ஐவரும் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர், முன்னதாக தொற்று உறுதியான 39 வயது இந்தோனீசிய அடவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். அவருக்கு இந்த மாதம் 16ஆம் தேதி தொற்று உறுதியாகி இருந்தது.

சமூக அளவில் அந்த ஐவர் போக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 18 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்றுகொரோனா