சமூக அளவில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 27) நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
எஞ்சிய 11 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்ததும் அவர்களுக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக யாரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 61,063 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 60,667 பேர் குணமடைந்து விட்டனர்.
தொடர்ந்து 109 பேர் மருத்துவமனையிலும் 230 பேர் சமூக வளாகங்களிலும் குணமடைந்து வருகின்றனர்.

