2வது தடுப்பூசியைக் காலந்தாழ்த்தி போட்டுக்கொள்வது குறித்து பரிசீலனை

2வது தடுப்பூசியைக் காலந்தாழ்த்தி போட்டுக்கொள்வது குறித்து பரிசீலனை

1 mins read

தேசிய தடுப்பூசி நடவடிக்கையின் அடுத்த கட்டத்தின்போது, இரு தடுப்பூசிகளுக்கு இடையிலான கால இடை வெளியை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.

தடுப்பூசியின் செயல் திறன் பாதிக்கப்படாமல், இப்போதுள்ள மூன்று முதல் நான்கு வார இடைவெளியை ஆறு முதல் எட்டு வாரங்களாக அதிகரிக்க முடியும் என்று வெளிநாட்டு, உள்நாட்டு நிபுணர்கள் நம்புகின்றனர்.

அது இறுதிசெய்யப் பட்டபின் மேலதிக விவரம் வெளியிடப்படும் என்றார் அமைச்சர்.

ஏற்கெனவே 2வது தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளோர் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இம்மாதம் 10ஆம் தேதி வரை, 1.8 மில்லியனுக்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியையும் 1.2 மில்லியனுக்கும் மேலானோர் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.