சமூகத்தில் 21 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 28 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் 21 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 28 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
f05ad167-fbca-4c8a-82bc-401e1663731a
-

சமூக அளவில் 21 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 17) புதிதாக 28 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் கிருமித்தொற்று உறுதியானவர்களில் 11 பேருக்கு முன்னதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில்லை. எஞ்சிய 10 பேருக்கு முன்னதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பிருக்கிறது.

சமூகத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஆறு பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (மே 17) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் கிருமித்தொற்று பதிவாகவில்லை.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்றுகொவிட்-19