சிங்கப்பூர்-இந்தியா: அன்றாடம் 25 பேர் வருகின்றனர்; 180 பேர் புறப்படுகின்றனர்

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் இப்போது ‘வந்தே பாரத்’ பயணிகள் விமானச் சேவை மட்டும்தான் இடம்பெற்று வருகிறது.

அந்த விமானங்களில் சராசரி யாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 180 பேர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிச் செல்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து ஏறத்தாழ 25 பேர் சிங்கப்பூர் வருகிறார்கள். இங்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்பும் சிங்கப்பூர் குடிமக்களாக அல்லது நிரந்தரவாசிகளாக இருக்கிறார்கள்.

போக்குவரத்து அமைச்சும் வெளியுறவு அமைச்சும் மனிதவள அமைச்சும் ஊடகங்களின் கேள்விகளுக்கு இன்று (மே 23) கூட்டறிக்கை மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தன.

இந்தியா 2020 மார்ச் முதல் தன் நாட்டில் இருந்து அனைத்துலக விமானங்கள் புறப்பட்டுச் செல்லவும் தரையிறங்கவும் தடை விதித்து இருக்கிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்தியாவிற்குச் சரக்கு விமானச் சேவையை மட்டுமே இப்போது நடத்த முடியும்.

வெளிநாடுகளில் உள்ள குடிமக்களைத் தன் நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக இந்திய அரசாங்கம் ‘வந்தே பாரத்’ சேவையை நடத்தி வருகிறது.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமானச் சேவை இது மட்டும்தான் என்பதால் இந்தியா திரும்ப விரும்புவோர் விமானங்களில் புறப்பட்டுவர இந்திய அரசாங்கம் அனுமதிக்கிறது.

இந்தச் சேவையை இந்திய அரசு நியமிக்கும் இந்திய விமான நிறுவனங்கள் மட்டுமே சிங்கப்பூர் அரசாங்கத்தின் அனுமதியுடன் இயங்குகின்றன.

இப்போது இத்தகைய பயணிகள் விமானச் சேவைகள் அனைத்தும் சாங்கி விமான நிலையம் முனையம் 1ல் செயல்படுகின்றன.

சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து பயணிகளும் இங்கு வரும்போது இரண்டு வகை கொவிட்-19 பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும்.

தரையிறங்கியதும் தனிப்பட்ட வாகனங்களில் அவர்கள் 21 நாட்கள் தனிமைப் படுத்திக் கொள்ளவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும் அந்தக் கூட்டறிக்கை தெரிவித்தது.

இந்தியா போன்ற தொற்று அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களைக் கையாளும் ஊழியர்கள் முழு பாதுகாப்பு உடை சாதனங்களுடன் செயல்படுகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!