சமூக அளவில் 23 பேர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் ஒருவர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 26) நண்பகல் நிலவரப்படி புதிதாக 26 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூரில் கிருமி தொற்றிய அந்த 24 பேரில் 21 பேர் முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சிய மூவருக்கு முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில்லை.
முன்னதாக கிருமித்தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அந்த 21 பேரில் 14 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
இதுபோக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,916 ஆக உள்ளது.

