சமூகத்தில் 23 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 33 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் 23 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 33 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
8979529a-f9bb-4bbb-be96-80d55c65ecd5
-

சிங்கப்பூரில் இன்று (மே 29) நண்பகல் நிலவரப்படி புதிதாக 33 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 23 பேருக்கு சமூக அளவில் தொற்று உறுதியானது. வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

சமூகத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 19 பேர், முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சிய நால்வருக்கு முன்பு கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில்லை. 13 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 10 பேருக்குத் தொற்று உறுதியானது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,003 ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்