சிங்கப்பூரில் இன்று (ஜூன் 5) நண்பகல் நிலவரப்படி புதிதாக 18 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேருக்கு சமூகத்தில் தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூகத்தில் தொற்று உறுதியான அனைவரும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐந்து பேருக்குத் தொற்று உறுதியானது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,176 ஆக உள்ளது.

