சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு கிருமித்தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 14 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
9437d177-1646-41b3-8998-6ec21a9d9639
-

சமூக அளவில் ஐந்து பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 7) புதிதாக 14 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் தொற்று உறுதியான அனைவரும் முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒன்பது பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,210 ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்