சமூகத்தில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 16 பேருக்கு கிருமித்தொற்று

சமூகத்தில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் புதிதாக 16 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
e10f91b8-eae7-43a1-8602-5c914b3022a4
-
Google News Preferred Icon

சமூக அளவில் 13 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (ஜூன் 21) புதிதாக 16 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் தொற்று உறுதியான அந்த 13 பேரில் எண்மர், முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சிய ஐவருக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கண்டறியப்படவில்லை.

வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மூவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,430 ஆக உள்ளது.

குறிப்புச் சொற்கள்