சாங்கி விமான நிலையம் 6,600 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்

சாங்கி விமான நிலையம் 6,600 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்

1 mins read
9cb888b2-0111-46b4-861c-0fa6be8b6183
விமானப் பயணங்கள் வேகமாக அதிகரித்துவரும் வேளையில், அதைச் சமாளிக்கத் தேவையான ஆள்பலத்தையும் சாங்கி உயர்த்த உள்ளது. விமானப் பயண முனையம் என்ற நிலையை மீண்டும் எட்டும் இலக்குக்கு ஆள்பற்றாக்குறை தடையாக இருக்கக் கூடாது என்பது அதன் நோக்கம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சாங்கி விமான நிலையம் 6,600க்கும் அதிகமான ஊழியர்களை வேலைக்குச் சேர்க்க இருக்கிறது.

சாங்கி விமான நிலையம் மேற்கொள்ளும் ஆகப் பெரிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு கண்காட்சி மண்டபத்தில் அடுத்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் அதன் ஒன்ஏவியே‌ஷன் வேலைச்சந்தை நடைபெற உள்ளது.

வேலைச்சந்தையின்போது ஊழியர்கள் அந்த இடத்திலேயே வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

சாங்கி விமான நிலையக் குழுமம் அதன் இணையப்பக்கத்தில் செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்தது.

வேலைச்சந்தையில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலைக்கு ஆள் சேர்க்கும்.

பயணிகள் சேவை, புத்தாக்கம், தொழில்நுட்பம், சரக்குகளை ஏற்றி இறக்குதல், தரக் கட்டுப்பாட்டு உறுதி, விமான நிலைய அவசரச் சேவை, இணையப் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

தற்போதைய வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், கொவிட்-19க்கு முந்தைய பயணிகள் எண்ணிக்கையில் பாதியை 2022ல் எட்டிவிடும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் கூறியது.