இலங்கைக்கு உலக வங்கி பண உதவி; தமிழ்நாடு பொருளுதவி

இலங்கைக்கு உலக வங்கி பண உதவி; தமிழ்நாடு பொருளுதவி

2 mins read
2c5c465f-d609-44d2-b21f-841db3e7dbc1
டான் பின் 99 என்ற இந்தக் கப்பல் உதவிப் பொருள்களை ஏற்றிக்கொண்டு நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குப் புறப்பட்டது. படம்: ஊடகம் -

வர­லாறு காணாத பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரும் இலங்­கைக்கு உலக வங்கி US$160 மில்­லி­யன் ($S222மில்­லி­யன்) குறு­கி­ய­காலக் கடன் வழங்கி உள்­ளது.

அவ­ச­ர­மாக தேவைப்­ப­டக்­கூ­டிய பொருள்­களை இறக்­கு­மதி செய்து­கொள்ள வச­தி­யாக இலங்­கைக்கு அந்த உதவி கிடைத்து இருக்­கிறது என்று புதிய பிர­த­மர் ரணில் விக்­ர­ம­சிங்கே நேற்று கூறி­னார்.

அந்­தத் தொகை­யைப் பயன்­படுத்தி எரி­பொ­ருளை இறக்­கு­மதி செய்ய முடி­யுமா என்­ப­தன் தொடர்­பில் தாங்­கள் செயல்­பட்டு வரு­வதாக நாடா­ளு­மன்­றத்­தில் பிரதமர் ரணில் குறிப்­பிட்­டார்.

இலங்­கை­யில் பெட்­ரோல் ஏறக்குறைய வற்­றி­ப்போய்­விட்டது என்று திங்­கட்­கி­ழமை அவர் தெரி­வித்து இருந்­தார்.

எரி­பொ­ரு­ளுக்­காக நீண்ட வரிசை­யில் காத்­தி­ருக்க வேண்டாம் என்று எரி­சக்தித் துறை அமைச்­சர் குடி­மக்­க­ளுக்கு வேண்­டு­கோள்­கூட விடுத்து இருந்­தார்.

இலங்­கைக்கு உட­ன­டி­யாக US$75 மில்­லி­யன் ($S104 மில்­லியன்) அந்­நியச் செலா­வணி தேவைப்­ப­டு­வ­தா­க­வும் அத்­தி­யா­வசியப் பொருள்­கள் இறக்­கு­ம­திக்கு அது அவ­சி­யம் என்­றும் திரு ரணில் திங்­கட்­கி­ழமை நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரை­யில் தெரி­வித்து இருந்­தார்.

இலங்கை பொருளியல் நில­வரம் நொடித்துப் போகும் அள­வுக்கு வந்து­விட்­டது என்­றும் இதற்கு அதி­பர் கோத்­த­பாய ராஜ­பக்சே குடும்­பமே கார­ணம் என்­றும் ஆகை யால் அதிபரும் பதவி விலக வேண்­டும் என்­றும் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­கள் நடந்து வரு­கின்­றன.

பிர­த­மர் பத­வி­யில் இருந்த மகிந்த ராஜ­பக்சே வில­கி­விட்­டார். ஆனால் அதி­பர் கோத்­த­பா­யவை பத­வி­யில் இருந்து அகற்ற நாடாளு­மன்­றத்­தில் போதிய ஆத­ரவு இல்லை என்று தெரி­விக்­கப்­பட்டது.

இந்­நி­லை­யில், தமிழ்­நாட்­டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் மாவு, 137 வகை­யான உயிர்­காக்­கும் மருந்­து­கள் ஆகி­யவை உள்­ளிட்ட ரூ.80 கோடி மதிப்­புள்ள உதவிப் பொருள்­களை ஏற்­றிக்­கொண்டு நேற்று 'டான் பின்-99' கப்­பல் இலங்­கைக்குப் புறப்­பட்­டுச் சென்றது.

முத­ல­மைச்­சர் ஸ்டா­லின் அந்தக் கப்­பலை வழி­ய­னுப்பி வைத்­தார்.

சென்­னை­யில் இருந்து நேற்று மாலை புறப்­பட்ட அந்­தக் கப்­பல் 44 மணி நேரத்­தில் கொழும்பு துறை­மு­கத்­தைச் சென்­ற­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.