வரலாற்றில் முதன்முறையாக கடன் தவணை தவறிய இலங்கை

வரலாற்றில் முதன்முறையாக கடன் தவணை தவறிய இலங்கை

1 mins read
3fbb44b5-e818-4a2c-8828-8fbefc42f148
இலங்கை அதன் கடன் தவணையைச் செலுத்தத் தவறிய நிலையில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. படம்: ஏஎஃப்பி -

இலங்கை அதன் வரலாற்றில் முதன்முறையாக கடன் தவணையைச் செலுத்தத் தவறி இருக்கிறது.

அரசாங்கப் பத்திரக் கடனுக்கான வட்டியாக இலங்கை கடந்த புதன்கிழமைக்குள் 78 மில்லியன் அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டியிருந்தது.

அந்த கடன் தவணையைச் செலுத்துவதற்கான அவகாசம் ஏற்கெனவே 30 நாள்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது.

தனது கடனை மறுசீரமைத்த பின்னரே தன்னால் கடன் தவணைகளைச் செலுத்த முடியும் என்று இலங்கை கடன்தந்த நாடுகளிடம் கூறிவிட்டதாக மத்திய வங்கித் தலைவர் நந்தலால் வீரசிங்கே கூறினார்.

அதனால் கொழும்பு முன்கூட்டியே கடன் தவணை தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக வங்கி நேற்று இலங்­கைக்கு US$160 மில்­லி­யன் ($S222மில்­லி­யன்) குறு­கி­ய­காலக் கடனை வழங்கியது.

கடன் தவணை செலுத்தத் தவறும் நாடுகள் அனைத்துலக அரங்கில் தேவையான கடனைப் பெறுவது கடினமாக இருக்கும்.

அதனால் அந்த நாடுகளின் நாணயத்திலும் பொருளியல் மீதும் நம்பிக்கை குறையும்

ஏற்கெனவே இலங்கை வரலாறு காணாத பொருளியல், அரசியல் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தற்போது 30 விழுக்காடாக இருக்கும் பணவீக்கம், வரும் மாதங்களில் 40 விழுக்காட்டை எட்டும் என்றும் திரு வீரசிங்கே எச்சரித்தார்.