திருமணப் பரிசுக்குள் வெடிபொருளை மறைத்து வைத்த முன்னாள் காதலன்; மணமகன் பலி

திருமணப் பரிசுக்குள் வெடிபொருளை மறைத்து வைத்த முன்னாள் காதலன்; மணமகன் பலி

2 mins read
3d781522-8eea-44aa-82e6-56ccb397839e
-

இந்­தி­யா­வின் சட்டீஸ்­கர் மாநி­லத்­தின் கபிர்­தாம் மாவட்­டத்­தில் கடந்த திங்­கட்­கி­ழமை திரு­மண வீடு ஒன்­றில் வெடிப்­புச் சம்­ப­வம் ஏற்­பட்­ட­தில் மண­ம­க­னும் அவ­ரது சகோ­த­ர­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

மேலும் நால்­வர் பலத்த காய­ம­டைந்­த­னர்.

உயிரிழந்த மண­ம­க­னின் வயது 22. அவ­ரது சகோ­த­ர­ருக்கு 30 வயது.

திரு­ம­ணப் பரி­சா­கத் தரப்­பட்ட 'ஹோம் தியேட்­டர்' எனப்­படும் வீட்­டில் திரைப்­ப­டம் பார்க்க உத­வும் ஒலிக் கரு­வி­க­ளின் தொகுப்­பில் வெடி­குண்டு மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.

மண­ம­க­ளின் முன்­னாள் காத­லன் அதைப் பரி­சா­கத் தந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

மண­ம­கன் ஹேமேந்­திர மெராவி பரி­சாக வந்த கரு­விக்கு மின்­இ­ணைப்பு தர முயன்­ற­போது அது வெடித்­தது.

சம்­பவ இடத்­தி­லேயே அவர் மாண்­டார். அவ­ரது சகோ­த­ரர் சிகிச்சை பல­னின்றி மருத்­து­வ­மனை­யில் உயி­ரி­ழந்­தார்.

வெடிப்­பைத் தொடர்ந்து அந்த அறை­யின் சுவர்­களும் கூரை­யும் இடிந்து விழுந்­த­தா­கக் கூறப்­பட்­டது. சம்­ப­வம் நடந்­த­போது மணப்­பெண் தன் தந்தை வீட்­டில் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

காவல்­து­றை­யி­னர் பரி­சுப் பொருள்­க­ளின் பட்­டி­ய­லைச் சோதித்­த­போது மண­ம­க­ளின் முன்­னாள் காத­லன் குறித்­துத் தெரி­ய­வந்­தது.

சார்ஜு எனும் அந்த ஆட­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

விசா­ர­ணை­யில், தனது காதலி வேறொ­ரு­வ­ரைத் திரு­ம­ணம் செய்­வது குறித்­துச் சின­ம­டைந்­த­தா­க­வும் அத­னால் வெடி­பொ­ரு­ளைப் பரி­சில் மறைத்து வைத்­துத் தந்­த­தா­க­வும் அவர் ஒப்­புக்­கொண்­டார்.

ஏற்கெனவே திருமணமான சார்ஜு இரண்­டா­வ­தாக அந்­தப் பெண்ணை மணக்க விரும்­பி­ய­தா­க­வும் அதற்கு மறுப்­புத் தெரி­வித்த அந்­தப் பெண் ஹேமந்த்­ராவை மணந்­த­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

எனவே, பரி­சிற்­குள் வெடி­பொ­ருளை மறைத்து, அதைத் திரு­மண மண்­ட­பத்­தில் சார்ஜு வைத்­துச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

அவர் சுரங்­கத்­தில் வேலை செய்­வ­தால் எளி­தாக வெடி­பொருள்­கள் கிடைத்­தி­ருக்­கக்­கூடும் என்று இந்­திய ஊட­கங்­கள் தக­வல் வெளி­யிட்­டுள்­ளன.

சம்­ப­வத்­தில் பலத்த காயம் அ­டைந்த நால்­வ­ரில் ஒன்­றரை வய­துச் சிறு­வ­னும் அடங்­கு­வான்.

நால்­வ­ரும் தற்போது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வரு­கின்­ற­னர்.