தமிழ் முரசின் 88ஆம் பிறந்தநாளுக்கு 88 நாள் பரிசு

‘சமூகத்தின் குரல்’ என்ற முழக்கத்திற்கு ஏற்ப, 1935ஆம் ஆண்டு முதல் இயங்கும் தமிழ் முரசு, சிங்கப்பூர் வரலாற்றில் முக்கிய தடம் பதித்து வரும் நாளிதழ்.

இரண்டாம் உலகப் போர், சிங்கப்பூரின் சுதந்திரம், 1980களில் இடம்பெற்ற தொழிற்புரட்சிக் காலம் என்று பலவித வரலாற்று மைல்கற்களின்போது சிங்கப்பூரில் வாழும் தமிழர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய குரல், தமிழ் முரசு.

“தமிழர் நலனுக்குழைப்பது தமிழ் முரசின் நோக்கம். தமிழர் நிலை உச்சம் பெற வேண்டும்; தமிழர் நலம் தழைக்க வேண்டும் என்பது தமிழ் முரசின் வேணவா. இந்த அவாவை நிறைவேற்ற தமிழ் முரசு பயங்கரமான பாதைகளினூடே துணிவாகச் சென்று தீரவேண்டும்,” என்றார் தமிழ் முரசு நிறுவனர் தமிழவேள் கோ சாரங்கபாணி.

மின்னிலக்க உலகில் தமிழ் முரசு எடுக்கும் தீவிர முன்னெடுப்பில், தமிழவேள் சாரங்கபாணி கூறிய வார்த்தைகள் உத்வேகம் தருகின்றன.

அச்சிடப்பட்ட செய்தித்தாளைத் தவிர்த்து பல்லூடக வழிகளில் இணையப்பக்கம், சமூக ஊடகத் தளங்களில் செய்திகளை வழங்கி வருகிறோம். கூடிய விரைவில் மின்னிலக்க செயலியின் வெளியீட்டையும் எதிர்பார்க்கிறோம்.

தமிழ் முரசின் வளர்ச்சியில் பங்களித்த வாசகர்களுக்கு நன்றி சொல்லும் வகையிலும் ஜூலை 6ஆம் தேதி தமிழ் முரசின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும் 88 நாள்களுக்கு தமிழ் முரசின் இணையப்பக்கத்தில் தடையற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

சந்தாதாரர்களுக்கான மின்னிதழைத் தவிர்த்து, மற்ற மின்னிலக்க செய்திகளை அனைவரும் பெறலாம்.

தமிழ் முரசின் தளங்களை அறிந்துகொள்ளவும் அணுகவும் இது வழிவகுக்கும்.

பொதுமக்களுக்கான சிறப்புக் கட்டுரை, தலையங்கங்கள், இளையர்களுக்கான இளையர் முரசு, சிறார்களுக்கான மாணவர், பாலர் முரசு போன்ற பிரித்தியேக செய்திகளின் மூலம் தமிழ் சமூகத்தின் நடப்புகளை அறியுங்கள்.

ஒரு நிமிடச் செய்தி காணொளிகள், வலையொளிகள் என்று பல்லூடக வழியில் செய்திகளைப் பெறுங்கள்.

தரமான செய்திகளை வழங்க களத்தில் இறங்கி ஓடியாடி விவரங்கள் சேர்க்கும் செய்தியாளர்கள்; கழுகுப் பார்வையுடன் செய்தியைத் திருத்தி மெருகூட்டும் செய்தி ஆசிரியர்கள்; அச்சிதழையும் இணையப்பக்கத்தையும் வடிவமைத்து அழகுசேர்க்கும் துணை ஆசிரியர்கள் என தமிழ் முரசு ஊழியர் ஒவ்வொருவரும் பொறுப்புடனும் திறனுடனும் செயலாற்றவேண்டியுள்ளது.

சமூகத்தை மையமாகக் கொண்ட, தரமான செய்திகளை வழங்க, இரவு பகல் என பாராமல் உழைக்கும் செய்தியாளர்களும் ஆசிரியர்களும் பின்னணியில் உள்ளனர்.

தமிழ் முரசு குடும்பத்தில் ஒருவராக நீங்களும் இணையுங்கள். தமிழ் முரசு இணையத்தளத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பதிந்துகொள்ளுங்கள்.

வாசகர்களுடன் எளிதாக தொடர்புகொள்ளவும் அன்றாட மின்னிலக்கச் சஞ்சிகைகள், தமிழ் முரசு நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களைப் பகிரவும் இது வழிவகுக்கும்.

தமிழ் முரசு செய்திகளை வாசித்து, பிடித்திருந்தால் மாதம் $4.90 கட்டணத்தில் மின்னிலக்கச் சந்தாவில் சேர்ந்து ஆதரவளியுங்கள். இதில் மின்னிதழையும் பிரத்தியேக சந்தா சலுகைகளையும் பெறலாம். முதல் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் $0.99 என்ற கட்டணத்தில் சேர சிறப்புச் சலுகை தற்போது வழங்கப்படுகிறது.

பெரும்பாலான செய்திகளை மின்னிலக்கத் தளங்களில் முதலில் வழங்கும் ஊடகமாக மாற்றியமைக்கும் முயற்சியை தமிழ் முரசு மேற்கொண்டு வரும் வேளையில், நீண்டகாலமாக ஆதரவளிக்கும் சந்தாதாரர்களுக்கும் சிறப்புப் பரிசுகளும் வெகுமதிகளும் காத்திருக்கின்றன. இது குறித்த மேல் விவரங்களுக்கு shop.sph.com.sg என்ற இணையப் பக்கத்தை நாடுங்கள்.

$17.90 கட்டணத்தில் அச்சிதழையும் இணைய சந்தாவையும் பெறலாம். சந்தா பற்றிய விவரங்களுக்கு காண்க: https://subscribe.sph.com.sg/publications-tm/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!