பல்கேரிய நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் பலி

பல்கேரிய நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் பலி

படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2026 - 9:05 pm

1 mins read

சோஃபியா: கிழக்கு பல்கேரியாவில் பனிமூட்டம் சூழ்ந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்ததாகப் பிரதமர் ரூமென் ராதேவ் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) தலைநகர் சோஃபியாவையும் கிழக்கு நகரான பர்காஸையும் இணைக்கும் ஏ1 சாலையில் விபத்து நிகழ்ந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறை, தீயணைப்புப் படையினர், அவசர சிகிச்சை வாகனக் குழுவினர் விரைந்தனர்.

நெடுஞ்சாலையின் ஆறு பாதைகளிலும் கார்களும் லாரிகளும் ஒன்றன் மீது ஒன்றாக மோதி நசுங்கியும், கவிழ்ந்தும், சாலையோரங்களில் விலகிச் சென்றும் கிடந்ததை உள்ளூர் ஊடகக் காட்சிகள் காட்டின.

காயமடைந்த 50 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பல்கேரியாவிற்கு வருகையளித்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இது, பெரும் துயரமானச் சம்பவம் என்று பிரதமர் ராதேவ் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களை மீட்க விமானங்களை அனுப்பியுள்ளதாகவும் விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வான் டெர் லேயன் தனது பயணத்தைச் சுருக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

“எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மீட்புக் குழுவினருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்