பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியின் சிசுவான் மாநிலத்தை 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது என்று சிசிடிவி எனப்படும் அரசாங்க ஒளிபரப்பு நிலையம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தெரிவித்தது.
அந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அறுவர் காயமடைந்ததையும் அது குறிப்பிட்டது.
சிசுவானில் காவ் கிராமத்தை மதியம் ஒரு மணியளவில் நிலநடுக்கம் தாக்கியதாகவும் அதன் மையம் ஆறு கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது எனவும் நிலையம் தெரிவித்தது.
பாதுகாப்புக்காக ஒருவர் ஓடி ஒளிய முயன்றபோது அங்கிருந்த சுவர் இடிந்துவிழுந்து அவர் மாண்டார் என்று தெரிகிறது.
உள்ளூர் அதிகாரிகள் அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதியை ஆய்வு செய்ய பல அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டதாக அரசாங்க ஊடகம் தெரிவித்தது.


