தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரியாவில் 81 வயது பிரபஞ்ச அழகிப் போட்டியாளர்

1 mins read
f1e00eb6-5e3a-4bfe-b97c-1eafec4fde8e
கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கெடுத்த திருவாட்டி சொய் சூன் ஹுவா, 81. - படம்: சூன்ஹுவா01/இன்ஸ்டகிராம்

சோல்: கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கெடுத்த திருவாட்டி சொய் சூன் ஹுவா, 81, வெற்றிபெறாவிட்டாலும், மிகச் சிறந்த உடைக்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியில், 22 வயது ஆடை அலங்கார மாணவியான ஹான் ஏரியல் வாகை சூடினார்.

வரும் நவம்பரில் மெக்சிகோ சிட்டியில் நடைபெறவிருக்கும் பிரபஞ்ச அழகிப் போட்டியில், அவர் தென்கொரியாவைப் பிரதிநிதிப்பார்.

பளபளப்பான வெள்ளை நிற ஆடையை அணிந்திருந்த திருவாட்டி சொய், சோல் ஹோட்டல் ஒன்றில் மேடையேறினார். தமது சகப் போட்டியாளர்கள் அவரைவிட பல்லாண்டுகள் வயது குறைவாக இருந்தனர்.

மருத்துவமனைப் பராமரிப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றியதை அடுத்து, அவர் எழுபது வயதுக்குப் பிறகு மாடலாகத் தொடங்கினார்.

கொரியப் பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 32 அழகிகளில் அவரும் ஒருவர்.

“இந்த வயதிலும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சவாலை எற்கும் துணிச்சல் என்னிடம் உள்ளது,” என்றார் திருவாட்டி சொய்.

அண்மையில் விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றத்தினால், திருவாட்டி சொய் அப்போட்டியில் பங்கெடுக்க முடிந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்