பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத்துறையில் ஆதிக்கம் செலுத்த சீனா கொண்டுள்ள இலக்கை வலுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து பெய்ஜிங்கில் உள்ள பள்ளிகளில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது எட்டு மணி நேரத்திற்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்படும்.
இந்தத் தகவலை பெய்ஜிங் நகராட்சிக் கல்வி ஆணையம் வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளைப் பள்ளிகள் தனிப் பாடமாக அல்லது ஏற்கெனவே கற்பிக்கப்படும் பாடங்களுடன் ஒருங்கிணைத்துக் கற்பிக்கலாம் என்று ஆணையம் கூறியது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் புரட்சி, கல்வி தொடர்பான பல வாய்ப்புகளை வழங்குவதாக சீனக் கல்வி அமைச்சர் ஹுவாய் ஜின்பெங் மார்ச் 5ல் தெரிவித்தார்.

