தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கனத்த இதயத்துடன் பாண்டா ஜோடிக்குப் பிரியாவிடை தரும் பிரிட்டன்

1 mins read
6c3f2f2d-2dcb-4784-82c7-63115e93fbde
எடின்பர்க் வனவிலங்கு தோட்டத்தில் இருக்கும் ராட்சத பாண்டா கரடிகளில் ஒன்றான யாங் குவாங். - படம்: ராய்ட்டர்ஸ்

எடின்பர்க்: பிரிட்டன் தன்வசம் இருக்கும் இரண்டு பாண்டா கரடிகளை விரைவில் சீனாவுக்குத் திரும்பி அனுப்பும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவற்றை எடின்பர்க் விலங்கியல் தோட்டத்தில் வைத்துப் பராமரிக்க சீன வனவிலங்குப் பாதுகாப்புச் சங்கத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவை சீனாவுக்குத் திருப்பி அனுப்பபடுவதாக அவர்கள் கூறினர்.

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விளையாடும் பாண்டா கரடிகள் விலங்கியல் தோட்டத்தைவிட்டுச் செல்வது அதன் ரசிகர்களுக்கு வருத்தம் அளித்துள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

யாங் குவாங், டியான் டியான் என்ற அவ்விரு பாண்டா கரடிகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ஒரு மாபெரும் பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தப்படும் என ஸ்காட்லாந்து ராயல் விலங்கியல் சங்கத்தின் எடின்பர்க் விலங்கியல் தோட்டம் தனது இணையத்தளத்தில் தெரிவித்தது.

இந்தக் கரடிகள், டிசம்பர் முதல் வாரத்தில் சீனாவுக்குத் திரும்பத் தயாராகும் எனவும் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவை கிளம்பும் நாளைத் தெரிவிக்க முடியாது எனவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்