தாய்லாந்துக் குகையிலிருந்து 2018ல் மீட்கப்பட்ட 12 சிறுவர்களில் ஒருவன் பிரிட்டனில் மாண்டான்.
காற்பந்துக் குழுவைச் சேர்ந்த அச்சிறுவர்கள், வடதாய்லாந்தில் உள்ள குகையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிக்கித் தவித்தனர்.
17 வயது டுவாங்பெச் பிரோம்தெப், அக்குழுவின் தலைவனாக இருந்தான்.
காற்பந்து உபகாரச் சம்பளத்தில் அவன் பிரிட்டனுக்குச் சென்றிருந்தான். சில தினங்களுக்கு முன் அவன் சுயநினைவு இழந்த நிலையில் அவன் தங்கியிருந்த விடுதியில் கண்டெடுக்கப்பட்டான். பின்னர், மருத்துவமனையில் அவன் உயிரிழந்தான்.
2018 ஜூன் 23ஆம் தேதி, காற்பந்துப் பயிற்சிக்குப் பிறகு அச்சிறுவர்கள் 'தாம் லுவாங்' குகையைச் சுற்றிப் பார்க்க சென்றனர். அவர்களுடைய உதவிப் பயிற்றுநரும் அவர்களுடன் உடனிருந்தார். பருவமழை காரணமாக அந்தக் குகையில் மழைநீர் மளமளவென நிரம்பியதில் வெளியேற முடியாமல் அவர்கள் 18 நாள்கள் குகைக்குள் சிக்கித் தவித்தனர்.
பின்னர் அச்சிறுவர்களும் உதவிப் பயிற்றுநரும் மூன்று குழுக்களாக மீட்கப்பட்டனர்.