பண்ணை விலங்கு இறைச்சி இறக்குமதிக்கு சீனா தடை

1 mins read
3db98434-d762-46c7-8b75-d952a14095ea
செம்மறியாடுகள் போன்ற பண்ணை விலங்குகளின் இறக்குமதியைச் சீனா தடை செய்துள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து செம்மறியாடுகள், ஆடுகள், பண்ணைப் பறவை வகைகள் போன்ற பண்ணை விலங்கு இறைச்சி இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது.

செம்மறியாட்டு அம்மை, ஆட்டு அம்மை (sheep pox, goat pox) போன்ற நோய்கள் பண்ணை விலங்குகளுக்கிடையே பரவுவது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பதப்படுத்தப்படாதவை (processed, unprocessed meat) ஆகிய இருவகை இறைச்சிக்கும் இத்தடை பொருந்தும்.

பண்ணை விலங்குகள் தொடர்பான நோய்கள் பல்வேறு நாடுகளில் பரவி வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டதைத் தொடர்ந்து சீனா தடை விதித்துள்ளது. சீனாவின் சுங்கத் துறை இம்மாதம் 21ஆம் தேதியன்று அதனைத் தெரிவித்தது.

சீனா விதித்திருக்கும் தடை, கானா, கத்தார், காங்கோ, நைஜீரியா, டான்ஸேனிா, எகிப்து, பல்கேரியா, கிழக்குத் தீமோர், எரித்ரியா ஆகிய நாடுகளைப் பாதிக்கும்.

செம்மறியாட்டு அம்மை, ஆட்டு அம்மைப் பரவல் காரணமாக பாலஸ்தீனம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நேப்பாளம், பங்ளாதே‌ஷ் ஆகியவற்றிலிருந்து செம்மறிாடுகள், ஆடுகள் சம்பந்தப்பட்ட இறைச்சிப் பொருள்களின் இறக்குமதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் சீனா கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்