சீனாவின் பொருளியல் வளர்ச்சி சரிவு

சீனாவின் பொருளியல் வளர்ச்சி சரிவு

2 mins read
ஏற்றுமதி 27 விழுக்காடாக உயர்ந்தபோதும் உள்நாட்டுத் தேவை குறைந்ததால் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது.
a8277b3c-080d-46ad-affa-55648aa47d2f
வரலாற்றிலேயே முதல்முறையாக சீனாவின் மாதாந்தர கார் ஏற்றுமதி ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.  - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவின் பொருளியல் வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் 4.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இது முதல் காலாண்டின் 5 விழுக்காடு வளர்ச்சியைவிடக் குறைவு. அந்நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கான இலக்கையும் எட்டவில்லை என்பதை சீனாவின் புள்ளியியல் துறை புதன்கிழமை (ஜூலை 15) வெளியிட்ட அறிக்கை சுட்டியது.

சீனா, மூவாண்டுகளில் முதன்முறையாக மார்ச் மாதத்தில் இவ்வாண்டுக்கான தனது பொருளியல் வளர்ச்சி இலக்கை 4.5 விழுக்காடு முதல் முதல் 5 விழுக்காடுவரை குறைத்தது.

வலுவான ஏற்றுமதி ஓரளவிற்கு கை கொடுத்தபோதிலும், உள்நாட்டுத் தேவை குறைந்தது, ஈரான் போரினால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக வளர்ச்சி சரிவு கண்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 தொடங்கிய ஈரான் போருக்குப் பிந்தைய முதல் முழுமையான காலாண்டுத் தரவு இது. 2022ன் இறுதியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு சீனா சந்தித்த மிகக் குறைந்த காலாண்டு வளர்ச்சி இது என்று கூறப்படுகிறது.

வலுவான உற்பத்திக்கும் குறைந்த உள்நாட்டுத் தேவைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

ஏற்றுமதி 27 விழுக்காடு உயர்வு

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பகுதிமின்கடத்தி, மின்சார வாகனங்களுக்கான உலகளாவிய தேவை காரணமாக ஜூன் மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 27 விழுக்காடு அதிகரித்தது.

வரலாற்றிலேயே முதல்முறையாக மாதாந்தர கார் ஏற்றுமதி ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

எனினும், ஏற்றுமதி வளர்ச்சிக்கு நேர்மாறாக உள்நாட்டுப் பொருளியல் சவாலை எதிர்கொள்கிறது.

ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை ஒரு விழுக்காடு வளர்ச்சியே கண்டுள்ளது. சொத்துச் சந்தை வீழ்ச்சியும் தொடர்கிறது. பயனீட்டாளர் தேவை மிகவும் குறைந்து இருப்பதால், வணிகங்கள் அதிகரித்த எரிசக்தி, மூலப்பொருள் செலவுகளைத் தாங்களே ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

புவிசார் அரசியல் பதற்றங்கள் நீடிக்கும்வரை இந்த நிலைமையை நிர்வகிப்பது சீனாவுக்கு மிகவும் கடினமாகிவிடும் என்று வல்லுநர்கள் கருத்துரைத்தனர்.

குறிப்புச் சொற்கள்