பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த இசுவாங் நெட்டோட்டத்தில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 இயந்திர மனிதர்களும் கலந்துகொண்டன.
அவ்வகை இயந்திரங்கள் மனிதர்களோடு இணைந்து 21 கி.மீ. தூரத்தை ஓடி கடந்தது இதுவே முதல் முறை.
டிராய்டுவிபி (DroidVP), நோய்டிக்ஸ் ரோபோடிக்ஸ் (Noetix Robotics) போன்ற சீன நிறுவனங்களின் இயந்திர மனிதர்கள் பல்வேறு வடிவங்களிலும் அளவிலும் அணிவகுத்து வந்தன.
பெண்மையின் அம்சங்களும் கண் சிமிட்டும் திறன்களையும் கொண்ட அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் இயந்திரங்களைத் தயாரித்துள்ளதாக அதனை வடிவமைத்த நிறுவனம் ஒன்று பெருமையாகக் கூறியது.
சில நிறுவனங்கள் போட்டி நடப்பதற்குச் சில வாரங்களுக்குமுன்பு தங்கள் இயந்திர மனிதர்களைச் சோதித்தன.
அந்நிகழ்ச்சி ஒரு கார் பந்தயம் போன்றது என பெய்ஜிங் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.