தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெப்பம் தாங்காமல் குளிர்சாதன பெட்டிக்குள் அமர்ந்த ஆடவர்

1 mins read
bbd9d162-c88e-48fe-a3be-6236f7cbde37
படம்: சமூக ஊடகம் -

உலகின் பல நாடுகளில் தற்போது வெயில் வாட்டிவதைக்கிறது.குறிப்பாக ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவுகிறது.

சீனாவின் குவான்டாங் பகுதியில் தற்போது வெப்பம் உச்சத்தைத் தொட்டு வருகிறது. அங்கு வெப்பநிலை 39.7 டிகிரி செல்சியசை தொட்டுள்ளது.

வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஆடவர் ஒருவர் குளிர்சாதன பெட்டிக்குள் அமர்ந்துள்ளார். அது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

காணொளி மே 31ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. காணொளியில் ஆடவர் ஒரு சிறு பிளாஸ்டிக் நாற்காலியைக் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து அமர்ந்துள்ளார்.

குளிர்சாதன பெட்டியில் ஒரு பகுதியில் குளிர்பானங்கள் இருந்தன. மற்றொரு பகுதியில் ஆடவர் அமர்ந்திருந்தார். ஆடவர் குளிர்சாதன பெட்டிக்குள் அமர்ந்து கைப்பேசியைப் பயன்படுத்துவதும் காணொளியில் பதிவாகியிருந்தது.

ஆடவர் எவ்வளவு நேரம் குளிர்சாதன பெட்டிக்குள் அமர்ந்திருந்தார் என்பது பற்றிய விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

அப்பகுதியில் வெப்பத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள பலர் வீடுகளை விட்டு வெளியேவதில்லை. இருப்பினும் சிலர் வேலைகளுக்காக வெளியில் வேண்டிய நிலையில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்