சீனப் போர் விமானங்கள் தென்படுகின்றன: தைவான்

சீனப் போர் விமானங்கள் தென்படுகின்றன: தைவான்

1 mins read
042f5f17-544d-495f-b5d4-b748fac89a41
சீன அதிபர் ஸி ஜின்பிங், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) தைவானின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான குவோமிண்டாங் கட்சியின் தலைவர் செங் லி-வுன்னைப் பெய்ஜிங்கில் சந்தித்தார். - படம்: ஏஎஃப்பி

தைப்பே: சீன அதிபர் ஸி ஜின்பிங் தைவான் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில், தைவான் அருகே 16 சீனப் போர் விமானங்கள் பறந்ததாகத் தைவானின் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (ஏப்ரல் 11) தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) திரு ஸி, தைவானின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான குவோமிண்டாங் கட்சியின் தலைவர் செங் லி-வுன்னைப் பெய்ஜிங்கில் சந்தித்தார். அப்போது, சீனா தனது சொந்தப் பகுதியாகக் கருதும் தைவானின் சுதந்திரத்தை முற்றிலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று திரு ஸி கூறினார்.

பதற்றங்களைக் குறைப்பதற்கான ஒரு சமரசப் பயணமாக திரு செங் தமது வருகையை விவரித்தார். மேலும், தைவான் நீரிணையில் அமைதியை நிலைநாட்ட குவோமிண்டாங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளைக் காண ஆவலோடு இருப்பதாக திரு ஸியிடம் அவர் தெரிவித்தார்.

அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு வழியாகத் தைவானுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது சீனாவின் வழக்கமான தந்திரமாகவே இருந்து வருகிறது எனத் தைவான் கூறி வருகிறது.

“எனவே ஒருபுறம் அவர்கள் அமைதிக்கான செய்திகளை அனுப்புவதை நாங்கள் காண்கிறோம். அதேவேளையில், மறுபுறம் அவர்கள் எந்தவித இடைவெளியுமின்றி தைவானுக்கு அழுத்தம் கொடுக்க ராணுவப் பலத்தை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்,” என்று அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்