ஜப்பானில் ‘ஏஐ’வழி வெளிநாட்டுச் சிறைக் கைதிகளுடன் தொடர்பு

ஜப்பானில் ‘ஏஐ’வழி வெளிநாட்டுச் சிறைக் கைதிகளுடன் தொடர்பு

படம்: யொமியுரி ‌ஷிம்புன் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்

11 Nov 2026 - 11:00 am

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் உள்ள சிறைகளில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியோடு அவர்களுடன் தொடர்புகொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கைக்குள் அடங்கும் ஏஐ மொழிபெயர்ப்புக் கருவியால் இது சாத்தியமாகிறது. சென்ற ஆண்டு கோடைகாலத்தில் ஜப்பானின் நீதித்துறை அமைச்சு கிட்டத்தட்ட 200 கருவிகளை விநியோகித்தது.

கைதிகளுக்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே தொடர்புகளை மேம்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்