தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் தீவு தொடர்பான குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளத் தயார்: மகாதீர்

1 mins read
f9bb0588-2272-47bd-9538-859da1e15e0c
புத்ரா ஜெயாவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர். - படம்: ராய்ட்டர்ஸ்

புத்ரா ஜெயா: சிங்கப்பூர் உடன் பத்து புத்தே (பெட்ரா பிராங்கா) தீவு தொடர்பான இறையாண்மை விவகாரத்தில் தாம் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக 99 வயதான மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

பத்து புத்தே என்று மலேசியா குறிப்பிடும் தீவு மீது சிங்கப்பூருக்கு அரசுரிமை இருப்பதாக அனைத்துலக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் முயற்சிகளை அவர் கைவிட முடிவு செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகாதீருக்கு எதிராக காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய அரச ஆணைக்குழு ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

தாம் இரண்டாவது முறையாக பிரதமர் ஆனபோது 2018ல் அமைச்சரவைக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்னதாக அந்த மேல்முறையீட்டை கைவிட தாம் தன்னிச்சையாக முடிவு செய்ததாக கூறப்படுவதை மகாதீர் மறுத்தார்.

பத்து புத்தே தொடர்பான முடிவு அந்த நேரத்தில் அமைச்சரவையால் கூட்டாக எடுக்கப்பட்டது என்பதையும் மகாதீர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இது அரசியல் நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையாகும் என்று மகாதீர் கூறினார்.

முன்னாள் பிரதமர் ஏற்கெனவே மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு முகமையால் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரது இரண்டு மூத்த மகன்களும் பல மாதங்களாக நீடித்த விசாரணையில் தங்கள் சொத்துக்களை அறிவித்துள்ளனர். தவறு நடக்கவில்லை என்று மகாதீர் மறுத்துள்ளார். அதே வேளையில், பிரதமர் அன்வார் இப்ராகிம், விசாரணைகளில் தாம் தலையிடவில்லை என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்