நேப்பாளத்தில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு, அனைத்துலக உதவி மறுப்பு

நேப்பாளத்தில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு, அனைத்துலக உதவி மறுப்பு

1 mins read
புதிதாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது
b12b44e5-42e2-4b7e-8d82-a08d164b3d95
நேப்பாளத்தில் உயிர் பிழைத்திருக்கக்கூடியயோருக்கான தேடல், மீட்புப் பணிகள் தொடர்கின்றன. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

காத்மாண்டு: நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் மாண்டோரின் எண்ணிக்கை ஆகக் கடைசி நிலவரப்படி 392ஆகக் கூடியுள்ளது.

1,400க்கும் அதிகமானேரைக் காணவில்லை. ஏஎஃப்பி செய்தி நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டது.

மேலும், இரண்டு ஏரிகளில் நீர் தேங்குவதால் புதிதாக வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நேப்பாளமும் சீனாவும் எச்சரித்துள்ளன.

புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை பனிப்பாறை ஒன்று கவிழ்ந்ததால் பாறைகள், மண், இடிபாடுகளைக் கொண்ட வெள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகள்வழி அலைமோதியதாக இரு நாடுகளும் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட ஒரு பாதை, மலையேறிகளும் யாத்திரிகர்களும் அதிகம் பயணம் செய்யும் ஒன்றாகும். அது, நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவையும் திபெத் தலைநகர் லாசாவையும் இணைக்கும் பாதை.

காணாமற்போனவர்களில் குறைந்தது 540 பேர் வெளிநாட்டவர். அவர்களில் குறைந்தது ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்கப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. ஆனால், நேப்பாளம் அதை மறுத்துள்ளது.

தேடல், மீட்புப் பணிகளைக் கையாளும் ஆற்றல் தங்களின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ளதாக நேப்பாளம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்