நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அமெரிக்க பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தைக் காணத் திடீரென விளையாட்டு அரங்கத்திற்கு வந்தார்.
அவரது வருகையால் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அரங்கத்திற்குள் வரும் ரசிகர்களிடம் கடுமையான சோதனை நடத்தப்பட்டது.
இதனால் ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் பலர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆட்டத்தின்போது அதிபர் டிரம்ப் அமர்ந்திருக்கும் காட்சி விளையாட்டு அரங்கத்தின் திரையில் ஒளிபரப்பானது. அதையடுத்து ரசிகர்கள் பலர் அவருக்கு எதிராகச் சத்தமிட்டனர்.
திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நடந்து முடிந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் வாகை சூடினார்.
அவர் இத்தாலியின் யானிக் சின்னரை 6-2, 3-6, 6-1,6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

