2024, மார்ச் மாதம் நீதிமன்றத்தில் டிரம்ப் முன்னிலையாக வேண்டும்: நீதிபதி உத்தரவு

2024, மார்ச் மாதம் நீதிமன்றத்தில் டிரம்ப் முன்னிலையாக வேண்டும்: நீதிபதி உத்தரவு

1 mins read
c3e76da8-d700-4fbd-aa66-b7fe997c1fbf
மத்திய நீதிமன்றத்தில் 2024, மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு டிரம்ப் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி திங்கட்கிழமை உத்தரவிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீது 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றதை மாற்றியமைக்க முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அன்று டிரம்ப் மத்திய நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் குறைந்தது மூன்று தனித்தனி குற்ற வழக்குகளின் விசாரணையை தேர்தலுக்கு முன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் நான்காவது குற்றவியல் வழக்கின் விசாரணை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

டிரம்பின் வழக்கறிஞர்கள் விசாரணைத் தேதியை 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்தபோதிலும் நீதிபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காடோனல்ட் டிரம்ப்நீதிமன்றம்விசாரணை