பறக்கும் விமானத்திலிருந்து அவசரகால சறுக்கு விழுந்த சம்பவம் குறித்து விசாரணை

பறக்கும் விமானத்திலிருந்து அவசரகால சறுக்கு விழுந்த சம்பவம் குறித்து விசாரணை

1 mins read
11e74c7b-62c2-456a-ab14-2d7968111924
‘டெல்டா ஏர்லைன்ஸ் போயிங் 767’ விமானம் தொடர்பான இந்தச் சம்பவம் குறித்து கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது. - படங்கள்: இணையம், ஏஎஃப்பி

வாஷிங்டன்: அவசரகாலங்களில் விமானத்தை விட்டு வெளியேறப் பயன்படுத்தப்படும் சறுக்கு, ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ விமானம் ஒன்றிலிருந்து விழுந்த சம்பவம் அமெரிக்காவில் ஏப்ரல் 26ஆம் தேதி நிகழ்ந்தது.

நியூயார்க் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சலிசுக்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் 183 பேர் பயணம் செய்தனர்.

அப்போது சறுக்கு விழுந்த காரணத்தால் விமானம் மீண்டும் ஜான் எஃப் கென்னடி அனைத்துலக விமான நிலையத்திற்குத் திரும்பிவிட்டது.

தற்போது சேவை வழங்குவதிலிருந்து அந்த விமானம் அகற்றப்பட்டுள்ளதாகவும் விமானம் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் போக்குவரத்துத் துறையின்கீழ் இயங்கிவரும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்